உடல் நலம் : மிளகு மருத்துவத்தின் மகத்துவம்

Friday, July 12, 2019

மிளகு மருத்துவத்தின் மகத்துவம்





நமது முன்னோர்கள் மிளகை உணவு காரத்திற்க்காகவும், மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தினார்கள். உணவுடன் மிளகு சேர்த்து உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

மிளகில் ஊட்டசத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அவை பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புசத்து, வைட்டமின் B,C,D அதிகம் உள்ளது.

மிளகில் பைப்பரின் என்ற அல்கலாய்டு உள்ளது, பைப்பரின் சிறந்த வலி நிவாரணியாகவும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்றுநோய்கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது.

மிளகு உணவில் அமிலத்தை கரைக்க செய்து, உணவினை விரைவில் செரிமானம் அடைய செய்கிறது. உடலில் வாயுக்களை தங்க விடாமல் வெளியேற்றுகிறது. மலசிக்கல் இல்லாமல் மலத்தினை வெளியேற்றுகிறது. உடலின் தங்கியிருக்கும் தேவையற்ற நீரினை, வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

பைப்பரின் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிய செய்கிறது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து, உடலில் எடையை சீராக்குகிறது. உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. உடலின் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நினைவுத்திறனை அதிகரிக்கிறது. உடலில் டோபமைன், சீரோடோனின் அதிகரிக்க செய்து நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. மிளகு மூளையின் செயல் திறனை அதிகரிக்க செய்கிறது.

உடலின் தோலில் ஏற்படும் வெண்புள்ளிநோயை(vitiligo) குணப்படுத்துகிறது. புறஊதா கதிர்களினால் ஏற்படும் தோல் புற்று நோயை குறைக்கிறது.

மிளகு, இருமல், மற்றும் சளி, மூக்கடைப்பு, தும்மல் போன்றவற்றிக்கு சிறந்த நிவாரணமாகும். நுரையீரலில் தங்கியிருக்கும் கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது.

விஷ பூச்சிக்கடிக்கு மற்றும் தோல் அலர்ஜிக்கு சிறந்த மருந்தாகிறது. தினமும் காலையில் மூன்று மிளகு எடுத்து மென்று சாப்பிட்டு சுடுநீர் குடித்து வந்தால் தோளில் ஏற்படும் அலர்ஜி விஷம் எல்லாம் முறிந்து விடும்.

மிளகு ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து, வறுத்து உப்பு சேர்த்து சுடு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால், சுரம் குறையும். சுரத்தினால் ஏற்படும் உடல் வலி குறையும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பசியை தூண்டும்.

மிளகை ஊசியில் குத்தி நல்லெண்ணெய் விளக்கில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால், சளியினால் ஏற்படும் தலைபாரம், தலைவலி குறைந்து விடும்.


வெள்ளை மிளகு, கசகசா அல்லது தேங்காயுடன் சேர்த்து அரைத்து பால் சேர்த்து தலையின் வேர்க்கால்களில் படும்படி தடவி ஒருமணி நேரம் கழித்து வாரம் ஒரு முறை தலை குளித்தால் தலையில் பொடுகு சரியாகி விடும். 

மிளகு, மஞ்சள்பொடி, லவங்கப்பட்டை, சிறிது துளசி, சுக்கு அல்லது இஞ்சி அணைத்து சேர்த்து இடித்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து பாதியாக தண்ணீர் வற்றியதும் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் காய்ச்சல் சரியாகி விடும். 

உணவில் மிளகாய்க்கு பதில் மிளகை பயன்படுத்தி வந்தால் உடலுக்கு நன்மையை தரும்.

No comments:

Post a Comment