உடல் நலம் : தோல் நோய்களை குணப்படுத்தும் நீர் முத்திரை

Monday, July 15, 2019

தோல் நோய்களை குணப்படுத்தும் நீர் முத்திரை





நீர் முத்திரை

        நீர் முத்திரை சருமத்தின் வறட்சியைக் குறைத்து அதன் ஒளிர்வு  மற்றும் மென்மையை மேம்படுத்த உதவுகிறது. இது பல தோல் நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது.

        உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக்  குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.

நீர் முத்திரை  செய்யும் முறை

        சிறிய விரலால் கட்டைவிரலின் நுனியை லேசாகத் தொட்டு, பின்னர் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும். நீர், நெருப்பு என்ற  இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.

ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது. முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத்  தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

பலன்கள்:

உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது  அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.


No comments:

Post a Comment