உடல் நலம் : சோம்பு (பெருஞ்சீரகம்) சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்.

Sunday, July 7, 2019

சோம்பு (பெருஞ்சீரகம்) சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்.




அஞ்சறைப்பெட்டியில்  உள்ள  மற்றொரு  மருந்து  (பெருஞ்சீரகம்)  சோம்பு. சோம்பு  சமையலுக்கு  மட்டும்  பயன்படுத்துவது  அல்ல, நல்ல  மருந்தாகவும் உடல்  ஆரோக்கியத்திற்கும்  பயன் படுகிறது.  சோம்பில்  வைட்டமின் A ,C,K,  ஜின்க் சோடியம் , கால்சியம், மெக்னீசியம் , தாமிரம், செலேனியம் , போலேட் , பொட்டாசியம் , நார்சத்து ,  இரும்பு சத்து, அதிகமாக  உள்ளது.

·         உணவு  சாப்பிட்டு  முடித்து  ஒரு ஸ்பூன்  சோம்பு  சாப்பிடுவதால்,  உணவு விரைவில்  செரிமானம்  அடையும், உடலின்  கெட்ட கழிவுகளை   நீக்குகிறது . இதில்  உள்ள  நார்சத்து  மலச்சிக்கல் இல்லாமல்  வைத்து  கொள்கிறது .

·         சோம்பு  லேசாக  வறுத்து  பொடி பண்ணி  தினமும்  ஒரு ஸ்பூன் சாப்பிட்டு  சுடுநீர்  சாப்பிட்டு  வந்தால்  லும்பினையும்  வலுவாக்கும்நமது  உடலுக்கு  நல்ல  வடிவத்தையும்  கொடுக்கிறது.

·         சோம்பில் ஜின்க்  மற்றும்  இரும்பு சத்து  இருப்பதால் எலும்புகளுக்கிடையில்  உள்ள  இணைப்பு திசுகளை உறுதியாக்குகிறது.  கால்சியம்  உடலில்  உறிஞ்சு தன்மை அதிகரிக்கிறது. தேவையற்ற  கால்சியம்  கழிவுகளில் வெளியேறாமல்  தடை செய்கிறது.

·         சோம்பில்  உள்ள  தாது   உப்புகள்  இரத்த குழாய்களை  விரிவடைய செய்து  இரத்த அழுத்தத்தை (High BP) குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல்  குறைந்த  இரத்த அழுத்தம் (LOW BP) உள்ளவர்களுக்கு   இரத்த  அழுத்தத்தை  சீராக வைக்கிறது.

·         சோம்பில்  உள்ள  நார் சத்து  உடல்  எடையை  குறைக்க  உதவுகிறது. சோம்பு  தேநீர்  காலையில்  குடித்து  வந்தால்  இரத்த குழாய்களில் படியும்  கொழுப்பினை  கரைக்கிறது. இதனால்  இதயநோய்  வராமல்  தடுக்கிறது.

·         சோம்பில்  செலேனியம்  அதிகமாக  உள்ளதால்  புற்றுநோய் கட்டிகள்  வளர்வதை  தடுக்கிறது.  இதில்  உள்ள  நார் சத்து  மலக்குடல்  புற்றுநோய்  பவுவதை  தடுக்கிறது.  இதில்  உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்  புற்றுநோய்  பாதிக்கப்பட்ட  இடத்தில்  உள்ள அழிந்த செல்களை  புதுப்பித்து  செல்களின்  வளர்ச்சிக்கு  உதவுகிறது.

·         சோம்பில்  உள்ள  கொலைன்  என்ற  பொருள்  உடலுக்கு  நல்ல தூக்கத்தை  தருகிறது.  இரவில்  ஒரு டம்ளர்  சோம்பு நீர்  குடித்தால் நல்ல தூக்கம்  வரும்.  குழந்தைகளுக்கும்  வயதானவர்களுக்கும் நினைவு திறனை  தூண்டுகிறது.  

·         சோம்பு உள்ள  வைட்டமின் B16  உடலின்  மெட்டபாலிசத்தை அதிகரித்து  உடலின்  இரத்த சர்க்கரையின்  அளவை  குறைக்கிறது.

·          சோம்பில்  உள்ள  இரும்புசத்து  மற்றும்  வைட்டமின் C உடலின் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

·         சோம்பில் உள்ள  ஈஸ்ட்ரோஜென்  பெண்களுக்கு  முறையான மாதவிலக்கு  தருகிறது, மற்றும்  மாதவிலக்கு  சமயத்தில்  ஏற்படும் வலியை  குறைக்கிறது.  


·         சோம்பு இடித்து தண்ணீரில்ப்போட்டு கொதிக்க வைத்து சிறிது வெல்லம் சேர்த்து ஆறவைத்து குடித்தால்கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்துகிறது.

(சிறுநீரகம்  பாதிப்பு  அடைந்தவர்கள்,  மாற்று  சிறுநீரக அறுவை  சிகிச்சை  எடுத்தவர்கள் , சோம்பினை  உணவில்  மட்டும் பயன்படுத்தலாம்  அதிகப்படியான  சோம்பு  எடுப்பதால்  சிறுநீரகம் மேலும்  பாதிப்படைய  வாய்ப்பு  அதிகம்.)


No comments:

Post a Comment