மஞ்சள் சமையல் மற்றும் பூஜை அறையில் மட்டுமே பயன்படுத்துகிறோம். மஞ்சள் நிறைந்த மருத்துவ குணம்
கொண்டது. நம் தமிழர்கள் மஞ்சளை புனித பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
பெண்களின் உடல் இயற்கையாகவே உடல் சூடு
அதிகம் கொண்டவர்கள்,
அதனால் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை மஞ்சளை உடலில் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. மஞ்சளுக்கு உடல் சூட்டினை குறைக்கும் தன்மை கொண்டது.
மஞ்சளில் புரதம், நார்சத்து, வைட்டமின் C, E
,B,K,
மற்றும்
தாது உப்புகள் பொட்டாசியம், தாமிரம், இரும்பு, கால்சியம்,
மெக்னீசியம்,
துத்தநாகம், போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது.
மஞ்சளில் இயற்கையாகவே
நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் வெட்டுக்காயம், தீக்காயம், பட்ட
பகுதிகளில் தடவினால் விரைவில்
குணமடையும். உடம்பில் ஏற்படும்
சிறு கட்டிகள் உடைக்க மஞ்சள், சுண்ணாம்பு, தேன், சேர்த்து கட்டியின் மீது தடவினால் இரண்டு நாள்களில் கட்டி உடைந்துவிடும், பின்பு
விரைவில் குணமடையும்.
இரத்தக்கட்டு, வீக்கம், வலி,
அடிபட்ட காயம், போன்றவற்றிற்கு மஞ்சள் தூளை சிறிது நீர் சேர்த்து கரைத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பக அடிபட்ட
பகுதிகளில் தடவினால்
வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
பாலில் மஞ்சள் தூள், அல்லது மஞ்சள் இடித்து , மற்றும்
ஒரு பல்
பூண்டு
சேர்த்து பாலை கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சளி, இருமல்,
தொண்டைப்புண்,
வறட்டு இருமல்
போன்றவை சரியாகி விடும்.
மஞ்சள் தூள், சுண்ணாம்பு சேர்த்து குழைத்து நெற்றியில்
பற்று போட்டால் தலைவலி, சளியினால் ஏற்படும் தலைபாரம், மூக்கில் நீர் வடிதல், போன்றவை
குறையும்.
மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்த புகையை சுவாசிப்பதன் மூலம் தலையில் நீர்கோர்த்து இருப்பதால் ஏற்படும் தலை பாரம், தும்மல், அலர்ஜி ,மூக்கடைப்பு போன்றவை குறையும்.
மஞ்சள் புற்றுநோய்
செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. பெண்களுக்கு
ஏற்படும் மார்பக புற்றுநோய் குறைக்க நமது முன்னோர்கள் மஞ்சள்
பூசிய கயிற்றினை மாங்கல்யத்தில் கோர்த்து அணிவித்தார்கள்.
மஞ்சள் மற்றும் கடலைமாவு சேர்த்து முகத்தில் தடவி அரைமணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் மரு , மாசு போன்றவற்றை நீக்கி
முகத்திற்கு அழகினை கொடுக்கிறது. முகத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்
வளர்வதை தடுக்கிறது. மஞ்சள் முகத்தில் பூசுவதால் முகத்தில் உள்ள
இறந்த செல்களை நீக்கி இளமையான தோற்றத்தை அளிக்கிறது. கஸ்தூரி மஞ்சள் தூள்
வசம்பு தூள்
சேர்த்து குளித்தால் உடலின் வியர்வை நாற்றம்
குறையும்.
நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால் குடல் புற்றுநோய், வயிறு
புற்றுநோய்,
வராமல்
காக்கிறது. மஞ்சள் தூள், கல்
உப்பு
சிறிது, சுடுநீரில்
சேர்த்து
வாய் கொப்பளிப்பதால்(gargle) தொண்டை வலி, வாய்ப்புண்,
பல் ஈறுகளில் வலி குறைகிறது.
மஞ்சள் தூள், வசம்பு
தூள்,
மருதோன்றி இலை, கற்பூரம் சேர்த்து கால் ஆணி உள்ள பகுதிகளில் தடவினால் சரியாகிவிடும். மஞ்சள் தூள் விளக்கெண்ணெய்
சேர்த்து குழைத்து, பாதத்தில் வெடிப்பு
உள்ள இடத்தில் ஒரு
வாரம்
தடவி வந்தால் பாதவெடிப்பு சரியாகி விடும்.
மஞ்சளையும், வேப்பிலையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்கு பூசி
குளிப்பதால் அம்மை நோய் குறையும், மேலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும்.
மஞ்சளை தண்ணீரில் கலந்து வீடு முழுக்க தெளிப்பதால் எறும்பு , ஈ
கிருமிகள்
மற்றும் விஷ பூச்சிகள் வீட்டின் உள்ளே அதிகம் வராது.
No comments:
Post a Comment