வாயு முத்திரை
வாயு முத்திரை உடலின் காற்றை குறைக்கிறது, இது அமைதியின்மை, பதட்டம் ஆகியவற்றைக்
கட்டுப்படுத்துகிறது, மேலும் மனதைக் கவரும் தன்மை கொண்டது. நம் இயற்கையான உடல் ஆற்றல்களான ஒளிரும், தும்மல்
அல்லது அலறல் போன்றவற்றை ஒத்திசைக்கிறது.
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும்,
நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கீழ் வாதம், கை,
கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம்,
வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி போன்றவை
ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.
வாயுப் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத்
தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு இளைப்பு
நோய் (whizzing) பிரச்சனை இருக்க வாய்ப்புகள் அதிகம்.
எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.
விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு
இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம். வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு.
தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட
முத்திரைகள் செய்யலாம். காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை
(24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது.
No comments:
Post a Comment