உடல் நலம் : சீரகத்தின் மருந்தாக எப்படி பயன்படுத்துவது, மற்றும் சீரகத்தின் பயன்கள்.

Tuesday, July 2, 2019

சீரகத்தின் மருந்தாக எப்படி பயன்படுத்துவது, மற்றும் சீரகத்தின் பயன்கள்.





நமது  வீட்டில்  சமயலறையில்  உள்ள  பொருள்களை  வைத்து  நமக்கு வரும்  நோய்களை  மருத்துவமனை  போகாமலே  விரட்டியடிக்கலாம். அஞ்சறை பெட்டியில்  உள்ள  இன்னொரு  மருந்து  சீரகம்.

சீரகம்  நமது  உடலின்  நச்சுத்தன்மையை  வெளியேற்றும்  தன்மை கொண்டது,  ஆகையால் தினமும்  நாம்  சீரக நீரை  குடித்து  வரலாம். சீரகம், வெற்றிலை, கல் உப்பு ,பெருங்காயம்  சிறிது , வைத்து  அரைத்து  வடிகட்டி குடித்தால்  வயிற்றில்  சேர்ந்துள்ள  கழிவுகள்  வெளியேறும். வயிறு வலி, வயிறு உப்புசம், உணவு செரிமானத்திற்கும், சீரகம் நீர் குடித்தால் சரியாகி விடும்.

சீரகம்  ஒருஸ்பூன்  எடுத்து  மென்று  சாப்பிட்டு  ஒரு கிளாஸ்  சுடுநீர் குடித்தால்  வயிற்றில்  ஏற்படும்  பிரச்சனைகள்  சரியாகி விடும்.

சீரகத்தில்  இரும்பு சத்து  அதிகம்  உள்ளதால்  இரத்த சிவப்பு  அணுக்களின் எண்ணிக்கையை  அதிகரிக்கிறது.  உடலைசோம்பல்  இல்லாமல்  இயங்க வைக்கிறது.  மறதியை குறைக்கிறது.

சீரகத்தில்  தாது உப்புக்கள்  இருப்பதால்  அவை  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.  உடலுக்கு தேவையான  நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது , உடலில்  கெட்ட  கொழுப்புகள் (LDL)  சேராமல்  தடுக்கிறது.  ஒரு ஸ்பூன் சீரகத்தை  தயிருடன்  சேர்த்து  இரண்டு  வேலை  எடுத்து  கொண்டால்  நல்ல கொழுப்பினை (HDL) அதிகரிக்கிறது. சீரக நீரை  தொடர்ந்து  குடித்து வந்தால்  உடலில்  உள்ள கொழுப்புகள்  கரைந்து  உடல் எடையை  குறைக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு  சீரக நீர்  கொடுப்பதால்  வயிற்றில்  பசியை  தூண்டுகிறது.  சீரகத்தில்  மெக்னீசியம்  அதிகம்  உள்ளதால்  உடலில் மெட்டபாலிசத்தை  சீராக்கி நல்ல  தூக்கத்தை  தருகிறது.

ஒருஸ்பூன் சீரக  பொடியை  வெண்ணை  சேர்த்து  சிறு  உருண்டையாக்கி குழந்தைகளுக்கு  மாதம்  ஒருமுறை  கொடுத்தால் வயிற்றில்  உள்ள  பூச்சிகள் வெளியேறிடும்.

சீரகத்துடன்,  தனியா  சேர்த்து  இரவு  ஊற  வைத்து  மறுநாள்  காலையில் ஒரு சிறு  துண்டு  இஞ்சி,  சேர்த்து  அரைத்து  வடிகட்டி  அரை மூடி  எலுமிச்சை சாறு  அதனுடன்  சேர்த்து,  மூன்றுநாள்  குடித்து  வந்தால்  பித்தத்தால் ஏற்படும் மயக்கம்,  தலைசுற்றல் சரியாகி விடும்.  

சீரக நீர் குடிப்பதால் உடலில்  எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரகத்தில் அதிகப்படியான  தாது உப்புகள்  இருப்பதால்  தோளில்  உள்ள  வறட்சியை போக்கி  தோலினை பொலிவடைய செய்கிறது.

1 comment: