உடல் நலம் : சளி , இளைப்பு (asthma, wheezing) நோய்களை குணப்படுத்தும், லிங்க முத்திரை

Monday, July 15, 2019

சளி , இளைப்பு (asthma, wheezing) நோய்களை குணப்படுத்தும், லிங்க முத்திரை






லிங்க முத்திரை  உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது மற்றும் குளிர்காலத்தில் கூட வியர்வை  ஏற்படுத்தும். இது சளி, ஆஸ்துமா, இருமல், சைனஸ் மற்றும் உலர்ந்த கபம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

லிங்க முத்திரை செய்யும் முறை:

லிங்க முத்திரை செய்ய, இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக இணைத்து, உங்கள் வலது கட்டைவிரலை நிமிர்ந்து வைக்கவும். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து நிதானமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த போஸை நீங்கள் செய்யலாம்.

பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.


பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.

ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும். ஆஸ்துமா பிரச்னையுள்ளோர், குளிரில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை உண்ட பின் இளைப்பு ஏற்பட்டால், இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்ய இளைப்பு கட்டுக்குள் வரும்.

காய்ச்சல் என்பது உடலில் உள்ள நோய்க் கிருமிகளின் தொற்றை அழிப்பதற்கு உடல் ஏற்படுத்தும் அதிகப்படியான வெப்பமே. காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.

தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.

No comments:

Post a Comment