உடல் நலம் : கடுகின் மருத்துவ பயன்கள்

Sunday, July 7, 2019

கடுகின் மருத்துவ பயன்கள்




அஞ்சறை பெட்டியில்  உள்ள  மிக  முக்கியமான  பொருள்  கடுகு.  கடுகு சிறுத்தாலும்  காரம் குறையாது, என்று  சொல்வார்கள். நாம்  சமயலறையில் பயன்படுத்தும்  கடுகில்  நிறைந்த  வைட்டமின்கள் ,  புரதம்,  தாது உப்புக்கள், நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்,  சத்து நிறைந்த  அமிலங்கள்  போன்றவை நிறைந்து  இருக்கு.

கடுகு பொடி  செய்து  மிளகு தூளுடன்  சேர்த்து  காலையில்  வெறும் வயிற்றில்  சாப்பிட்டு   ஒரு டம்ளர்   சுடுநீர்  குடித்தால்  சளி  இருமல், இரைப்பு ஆஸ்துமா,  மூச்சு திணறல்  போன்றவை  சரியாகி விடும்.  சுவாச குழாய் பிரச்சனைகளை  சரி  செய்கிறது.  நுரையீரல்  தொற்று  கட்டுப்படுத்துகிறது.

கடுகு எண்ணெய் ,  நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்  மூன்றும்  சேர்த்து சூடாக்கி  கற்பூரம்  சேர்த்து  ஆறவைத்து  தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி, இரத்தக்கட்டு,  போன்ற  இடங்களில்  தடவி  சூடு தண்ணீர்   ஒத்தடம்  கொடுத்தால்  வலி  குறைந்து விடும்.  முடக்கு வாதத்திற்கு  வலி  நிவாரணியாக இருக்கிறது.

விஷம்,  தூக்க மாத்திரை   சாப்பிட்டவர்களுக்கு  கடுகு  அரைத்து தண்ணீரில்  கரைத்து  கொடுத்தால்  வாந்தியை   உண்டாக்கும், இது  வயிற்றில் உள்ள  விஷத்தை  வாந்தியின்  மூலம்  வெளியேற்றுகிறது.

 கடுகு, சிறிது சுக்கு , சேர்த்து  அரைத்து  தலைவலி  உள்ள  இடத்தில்  பத்து போட்டால்  தலைவலி  குணமாகிவிடும். கடுகு பொடியுடன்  சிறிது  தேன்சேர்த்து சாப்பிட்டால்  சளி, வறட்டு இருமல், வயிற்று வலி, சரியாகி விடும்.

கடுகு  எண்ணெய்  தடவி வந்தால்  நமது  உடல்  மூப்பு  அடைவதை  தடுத்து  இளமையான  தோற்றத்தை  கொடுக்கிறது.  கடுகு எண்ணெய்டன் ,  லாவண்டர் ஆயில்  சேர்த்து  முகத்தில்  தேய்த்து  கழுவி  வந்தால், முகத்தில்  இறந்த செல்களை  வெளியேற்றி, முகத்திற்கு பொலிவினை தருகிறது.

தலை முடி  வளர்ச்சிக்கு  உதவுகிறது. கடுகு எண்ணெய்  எடுத்து  முடியின் வேர்க்கால்களில்  படும்படி  தடவி வந்தால்  தலை முடி  வலுவடைகிறது.

கடுகு  எண்ணெய்  தேமல்  உள்ள  இடத்தில  தடவி  சீயக்காய்  போட்டு குளித்து  வந்தால்  தேமல்  போய்விடும்.

No comments:

Post a Comment