உடல் நலம் : தூங்கும்போது கெண்டைக்கால் தசையை பிடித்து இழுக்கிறதா அப்ப இதை படிங்க…

Saturday, July 13, 2019

தூங்கும்போது கெண்டைக்கால் தசையை பிடித்து இழுக்கிறதா அப்ப இதை படிங்க…






 இரவு  தூங்கும்போது  கெண்டைக்கால்  தசை  பகுதியை  பிடித்து  இழுக்கும். இதனால்  ஏற்படும் அதிக வலியினால்  உரக்க  கத்தியிருப்பீர்கள்.  இரவு தூக்கத்தில்  கெண்டைக்கால்  தசைகளில்  இறுக்கம்  ஏற்படுவதாலும்  தசை நரர்கள்  சுருக்கப்படுவதாலும்  தசை  பிடிப்பு  ஏற்பட்டு  வலி  ஏற்படுகிறது. இந்த வலி  பொதுவாக  பத்து  நிமிடம்  வரை  நீடித்து இருக்கும், சில நேரங்களில்  அதனால்  ஏற்படும்   வலி நாள்  முழுவதும்  நீடித்து  இருக்கலாம்.

கெண்டைக்கால்  தசை  பிடிப்பிற்கு  இதுதான்  முக்கிய காரணம்  என்று  எதையும்  குறிப்பிட்டு  சொல்ல  முடியாது.  இதற்கு  பல  காரணங்கள்  இருக்கிறது.  கெண்டைக்கால்  தசை   பிடிப்பு,  நீண்ட நேரம்  ஒரே நிலையில் உட்கார்ந்து  இருப்பதாலும்,  அல்லது  நின்று  இருப்பதாலும்   கெண்டை  கால் தசை  நார்கள்   பாதிக்கப்படுகின்றன.  அதிக  வேலை  அல்லது உடற்பயிற்சியினால்  தசை பிடிப்பு  ஏற்படுகிறது.

அதிகப்படியான  தசை பிடிப்பு   அசாதாரண   நரம்பு  சேதத்தினை உண்டாகுகிறது.  உடலின் அதிகப்படியான  நீரிழப்பு ம்  தசை பிடிப்பு  ஏற்பட முக்கிய  காரணமாகும்.

 சில  பேருக்கு  தசை பிடிப்பு  ஏற்பட  சில  அடிப்படை  காரணங்கள் கொண்டுள்ளது.  சில நேரங்களில்  நமது  உடல் சோர்வு, தசை சோர்வு போன்ற கரணங்களால்  ஏற்படுகிறது .அதிகப்படியான  ஆல்கஹால்  எடுப்பதனால் ஏற்படுகிறது,  தைராய்டு  சுரப்பு  குறைவதாலும்,  சிறுநீரக செயல் இழப்பு,  நீரிழிவு நோய்,  உடலின்  திசு  கட்டிகளாலும், கர்ப்ப  காலத்திலும்,  சில மருந்துகளை உண்பதாலும், புற்று நோய்  சிகிச்சையினால்  உடல் பலவீனம்  அடைந்து  தசை பிடிப்பு   ஏற்படுகிறது.

  கெண்டைக்கால்  தசை   பிடிப்பு ஏற்படும் போது, கால்களை  நீட்டி அழுத்தம்  கொடுத்து  தேய்த்து  விடுவதாலும், தசை பிடிப்பு  குறையும்  வரை கால்களை  நீட்டி  வைத்துருப்பதால் தசை பிடிப்பு  குறையும். தசைகளுக்கு மாசாஜ்  செய்வதன்  மூலம்  வெப்பத்தை  உண்டாக்கி  தசை  பிடிப்பை குறைக்கலாம்.  

தசை பிடிப்பு  ஏற்பட்ட  இடத்தில  நாள்  முழுவதும்  ஏற்படும் வலியை குறைக்க  சுடுநீர்  ஒத்தடம்  அல்லது  ஐஸ்கட்டி  ஒத்தடம்  கொடுக்கலாம். இரவு நேரத்துல  தசை  பிடிப்பு  ஏற்படுவதை  தடுக்க  இரவு  உறங்கும் போது  லேசான நடைப்பயிற்சி  செய்வதன்  மூலம்  குறைக்கலாம்.

நல்ல உணவு, பழங்கள்,  காய்கறிகள்,  உடலுக்கு தேவையான  அளவு நீர் அருந்துவது, மிதமான  நடைப்பயிற்சி  போன்றவற்றால்  மட்டுமே  குறைக்க முடியும்.

No comments:

Post a Comment