உடல் நலம் : வெந்தயத்தின் மருத்துவ குணங்களும், வெந்தயம் சாப்பிடுவதால், ஏற்படும் நம்மைகள்

Monday, July 1, 2019

வெந்தயத்தின் மருத்துவ குணங்களும், வெந்தயம் சாப்பிடுவதால், ஏற்படும் நம்மைகள்







நம்ம  வீட்டு அஞ்சறைப்பெட்டியில்  இருக்கும்  வெந்தயம்  நமக்கு சமையலுக்கு  மட்டும்  பயன் படுவது  கிடையாது.  வெந்தயத்துல  நிறைய மருத்துவ  குணங்கள்  இருக்கு. அஞ்சறைப் பெட்டியில  உள்ள  ஓவ்வொரு பொருளும்  நம்ம  உடலுக்கு  ரொம்ப  முக்கியமானது, அதனாலதான்  நம்ம முன்னோர்கள்  அந்த  பொருள்களை  மட்டும்  அஞ்சறை  பெட்டியில வச்சுயிருந்தாங்க.

ஒரு ஸ்பூன்  வெந்தயம்  சாப்பிடுவதால்  ஏற்படும் நன்மைகள்.

·         ஒரு ஸ்பூன்  வெந்தயத்துல  கால்சியம், இரும்பு சத்து,  நார் சத்து ,  புரதம் சோடியம், பொட்டாசியம்,  மெக்னீசியம்  போன்றவை  நிறைந்து  இருக்கு.

·         வெந்தய ம்  நமது   உடலின்  நச்சுத்தன்மையை  வெளியேற்றும் தன்மை கொண்டது.

·         வெந்தயம்  ஊற வைத்த  நீரை  பருகுவதால்  வாய்ப்புண் , வயிற்றுப்புண்,  குடல்புண்,  போன்றவை  குணமாகும். வெந்தய நீர் உடல்  சூற்றினை  குறைக்கிறது .

·         தினமும்  காலையில்  ஒருஸ்பூன்   ஊறவைத்த  வெந்தயம் சாப்பிடுவதால்  உடலின்  செரிமான தன்மை  அதிகரிக்கிறது.

·         வெந்தயம்  இன்சுலின்  சுரப்பை  அதிகரித்து  இரத்த  சர்க்கரையின் அளவை  குறைக்கிறது.

·         ஒரு ஸ்பூன்  வெந்தய  பொடியை  மூன்று  வேலையும் சாப்பிடுவதால்  பசியை  குறைத்து  உடலின்  எடையை  குறைக்கிறது.  அதுமட்டும்  இல்லாமல் உடலின்  கெட்ட கொழுப்புகள்  உடம்பில்  சேராமல்  தடுக்கிறது.

·         வெந்தயத்துல உள்ள  நார்சத்து  மலசிக்கல்  இல்லாமல்  உடல் கழிவுகளை  வெளியேற்றுகிறது.  

·         வெந்தயம்  ஊறவைத்து அரிசியுடன்  சேர்த்து  கஞ்சி செய்து சாப்பிட்டால்  உடல் சூடு  குறைக்கிறது , உடலின் சோம்பலை போக்கி சக்தியை  தருகிறது.

·         பெண்களுக்கு மாத விலக்கு சமயத்தில் ஏற்படும் வலியினை குறைக்கிறது, மேலும்  இந்த சமயத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்த போக்கினை கட்டுப்படுத்துகிறது.

·         பாலூட்டும்  பெண்களுக்கு  பால் சுரப்பினை  அதிகப்படுத்துகிறது. இதில்  இரும்புசத்து  அதிகம்  உள்ளதால்  இது  இரத்த சிவப்பு அணுக்களை  உற்பத்தி  செய்ய  உதவுகிறது.

·         வெந்தயம்  தலை  முடியின் வளர்ச்சிக்கு  உதவுகிறது. வெந்தயத்தை  ஊறவைத்து  அரைத்து  தலை முடியில  தடவி  ஒரு மணி நேரம்  கழித்து  குளித்தால்  தலை முடி கொட்டுவது  நின்று விடும்

·         இதுல  உள்ள நார்சத்து  இரத்த தந்துகிகள்   விரிவடையச்செய்து  இதய அடைப்பை சரி செய்கிறது. இரத்த  அழுத்தத்தை  குறைக்கிறது.


·         வெந்தயம்  சாப்பிடுவதால்  ஆண்களுக்கு  டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்  சுரப்பினை  அதிகரிக்கிறது.

·         வெந்தயத்துல சோடியம்  பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் சிறுநீரகம்,மற்றும்  கல்லிரல்  செயலை சீராக்குகிறது

2 comments: