உடல் நலம் : தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா, அப்ப இத மட்டும் பயன் படுத்துங்க.

Saturday, June 29, 2019

தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா, அப்ப இத மட்டும் பயன் படுத்துங்க.








 முன்பு  ஆண்களுக்கு வழுக்கை ஐம்பது  வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான்  வரும்,  ஆனால்  இப்போது  20-25      வயதில் உள்ளவர்களுக்கும்  தலையில்  முடி  உதிர்ந்து  வழுக்கை  விழ  ஆரம்பிக்கிறது. இதற்கு   முக்கிய  காரணம்  முடி  பராமரிப்பு  இன்மை,  உணவு பழக்கம் தூக்கமின்மை,  பாரம்பரியம், மனஅழுத்தம்,  தலையில்  வியர்வை  அதிகமாக சுரப்பதாலும்  முடி  உதிர  ஆரம்பிக்கிறது.  நாளடைவில்  முடி  உதிர்ந்த  இடத்தில் வழுக்கை  விழ  ஆரம்பிக்கிறது.


 இப்போது  உள்ள  சிறுவர்கள்  முதல்  இளைஞர்கள்  வரை  தலையில் கெமிக்கல்  சேர்ந்த  ஜெல்களை  உபயோகிப்பதால் தலை  வறண்டு  விடுகிறது. தலையில்  எண்ணெய்  உபயோகிப்பது  இல்லை.  நாம்  கடைகளில்  விற்கும் எண்ணெய்  உபயோகிக்க  கூடாது.  செக்கில்  ஆட்டிய  தேங்காய்  எண்ணெய் உபயோக  படுத்த  வேண்டும்.  தலையில்  எண்ணெய்  தடவும்  போது முடியின் வேர்க்கால்களில்  படும்படி  தடவ வேண்டும்,  அப்படி பகலில்  தடவ  இயலாதவர்கள்  இரவு  நேரத்தில்  தடவலாம்

இரண்டாவது  சீப்பு  உபயோகபடுத்த  வேண்டும்.  சீப்பு  உபயோகப்படுத்தும் போது  தலையில்  அழுந்த  படியுமாறு  உபயோகப்படுத்த  வேண்டும்.  சீப்பினை அடிக்கடி  உபயோக படுத்த  வேண்டும்.  இளைனர்கள்  சீப்பு  உபயோகிப்பது இப்போது   மிகவும்  குறைந்து வருகிறது,  சீப்பு  உபயோகிக்கும் போது தலையில்  இரத்தம்  ஓட்டம்  அதிகரித்து  முடியின்  வேர்க்கால்கள் வலுவடைகிறது  அது மட்டுமில்லாமல்  முடி  உதிர்ந்த  இடத்தில்  முடி  வளர உதவுகிறது.  மரத்தால் ஆன சீப்பு உபயோக படுத்தவும்.

இந்த  இரண்டு  முறை  மட்டுமே   வழுக்கை   விழாமலும் , முடியின் வளர்ச்சியையும்  அதிகப்படுத்த  உதவுகிறது.  எந்த முறையை பயன்படுத்தியினாலும்  தொடர்ந்து  உபயோக படுத்தி பாருங்க உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்க

No comments:

Post a Comment