கருவுற்றிருக்கும்
காலத்தில் பெண்களுக்கு வாந்தி,
மலச்சிக்கல் , வயிற்று வலி, சிறுநீர்
பிரியாமை, கால் வீக்கம் , பிரசவநேரத்தில்
ஏற்படும் அரிப்பு , தூக்கமின்மை போன்றவை
ஏற்படும். இதற்கு பயப்படவேண்டாம், வீட்டில்
உள்ள பொருள்களை வைத்து இதை குணமாக்கலாம்.
வாந்தி மற்றும் மயக்கம்:
உணவினை
பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பசிக்க ஆரம்பிக்கும்போதே உணவு
உட்கொள்ள வேண்டும். பசிக்கும்போது
சாப்பிடாவிட்டால் மயக்கம் மற்றும் வாந்தி
ஏற்படும். காலை வேளையில் இளநீர்
எடுத்து கொள்ளவும். தண்ணீர் அதிகமாக குடிக்கவும்.
சோம்பு போட்டு கொதிக்க வைத்த
நீரை அருந்தலாம் இது
உணவு செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
மலசிக்கல்:
கருவுற்றுக்கும்
காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதை தடுக்க நார்சத்து
நிறைந்த கீரை உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மாதுளை பழம் , வாழை போன்றவற்றை
தினமும் சாப்பிட வேண்டும். இவை
பொட்டாசியம் மெக்னீக்ஷியம் உடம்பில் சேர உதவுகிறது. மலச்சிக்கல்
உள்ளவர்கள் இரவு
உறங்குவதற்கு முன் சீரகம் போட்டு
கொதிக்க வைத்த நீரை இளசூடான
பதத்தில் குடிக்க வேண்டும்.
வயிற்று வலி:
உடல்
சூற்றினால் ஏற்படும் வயிற்று வலியை போக்க
வெந்தயம் ஊறவைத்த நீரை அல்லது
மோர் குடிக்கலாம். வெந்தய பொடியை கால்
டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இளநீரில்
பங்கற்கண்டு கலந்து குடிக்கலாம். சூடுவலி , இடுப்பு வலிக்கு
இடித்த சோம்பு வெங்காயம் நறுக்கி
போட்டு ஒரு தம்ளர் தண்ணீரில்
கொதிக்க வைத்து பனைவெல்லம், வெண்ணெய்
சேர்த்து வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்க வேண்டும்.
சிறுநீர் பிரியாமை:
சிறுநீர்
பிரச்சினை ஏற்படும்போது கால் வீக்கமும் ஏற்படும். அதிகமான தண்ணீர் குடிக்க
வேண்டும். தண்ணீர் காய்கறிகளான சுரைக்காய்
, பூசணிக்காய் உணவில் சேர்த்து கொள்ள
வேண்டும். பார்லி அரிசி உடைத்து கஞ்சி
வைத்து குடிக்கலாம். இது மிகவும் உடலுக்கு
வலிமையை தரும். உடலின் நீரை
வெளியேற்றும்.
கால்வீக்கம்:
பிரசவ
நேரத்தில் சில பெண்களுக்கு கால்
வீக்கம் ஏற்படுவது இயல்பு. குழந்தை பிறந்து
இரண்டு நாட்களுக்குள் கால்வீக்கம் குறைந்து விடும். அதிக நேரம்
கால்களை நீட்டியோ அல்லது மடக்கியோ அல்லது நின்றோ இருக்க
வேண்டாம். கொஞ்சம் நேரம் நடை
பயிற்சி மேற்கொள்ளலாம். கால்வீக்கம் தூக்கமின்மைக்கு, ஒரு ஸ்பூன் சீரகம்,4-5
மிளகு, ஒரு ஸ்பூன் தனியா,
சுக்கு, உடைத்து தண்ணீரில் கொதிக்க
வைத்து நன்கு சுண்டி வந்ததும்
பனைவெல்லம் வெண்ணெய் சேர்த்து வாரம் ஒருமுறை குடிக்கலாம்.
பிரசவ நேரத்தில் தோலில் ஏற்படும் அரிப்பு
:
சில
பெண்களுக்கு பிரசவ நேரத்தில் எட்டு
இருந்து ஒன்பது மாதத்தில் தோலில்
அரிப்பு ஏற்படும். உடலின் சில இடங்களில்
அல்லது வயிறு, தொடை பகுதியில்
சிவந்த திட்டுகளாக இருக்கும். இதற்கு பெரும்பாலும் பயப்பட
தேவையில்லை. தண்ணீர் அதிகமாக குடிக்க
வேண்டும். குழந்தை பிறந்த பிறகு
பெண்களின் உடல் இயல்பு நிலைக்கு
வந்து விடும். அரிப்பு மிகவும்
அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்.
No comments:
Post a Comment