முதல் முறையாக கருவுற்றுருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் மிகவும்
கடினமாக இருக்கும்.அதுவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் கடினமாக
இருக்கும். ஆனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. முதல் மூன்று
மாதங்கள் பெண்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் புரோஜஸ்டரன்
என்ற ஹார்மோன் சுரப்பினால் ஏற்படுகிறது. இதனால் மார்பகம் வீங்குதல், வலி, வாந்தி,
உணவின் மேல் விருப்பமின்மை, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.
பெண்களின் உடல் மற்றும் முகம் சற்று வீக்கத்துடன் (ஊதினாற்போல) காணப்படும்.
காலையில் வெறும் வயிற்றில் இருப்பதால் காலை நேரத்தில், தலைச்சுற்றல், வாந்தி,
மயக்கம் ஏற்படும். பல் துலக்குவது கூட கடினமாக இருக்கும். மிகவும் களைப்பு மற்றும்
சோம்பலாக இருக்கும். மார்பக காம்பு வலி மற்றும் வீக்கத்துடன் இருக்கும். இந்த மாற்றங்கள்
முதல் மூன்று மாதங்கள் மட்டுமே சில பெண்களுக்கு இருக்கும். இதற்காக பயப்பட
தேவையில்லை. இன்னும் சில பெண்களுக்கு சில துளிகள் இரத்த போக்கு(bleeding) இருக்கும்,
அதிகமான இரத்தபோக்கு இருப்போர் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.
இந்த முதல் மூன்று மாதங்கள் பெண்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். தனக்கு
விருப்பமான உணவினை சாப்பிட வேண்டும். மேலும் தங்கள் மனதை சந்தோஷமாக
வைத்து இருக்கவேண்டும். ஆண்கள் இந்த நிலையில் தங்கள் மனைவியை சந்தோஷமாகவும்
அவர்களுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும். உணவினை மூன்று வேளையாக
எடுத்து கொள்ளாமல் பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடவும். உணவு சாப்பிட பிடிக்காதவர்கள்
பழங்கள் மற்றும் பழச்சாறு சாப்பிடவும். இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளவர்கள் பழச்சாறு
குடிக்க வேண்டாம், பழங்கள் மட்டும் சாப்பிடவும்.
எண்ணெய் பலகாரம், துரித உணவு, அதிக காரம், நிறைந்த உணவினை தவிர்க்கவும்.
புரதம் நிறைந்த உணவு, பழங்கள், விரைவில் செரிமானம் ஆகும் உணவினை சாப்பிட
வேண்டும். பெண்கள் முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுதான் கர்ப்பத்தில் வளரும்
குழந்தையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது, மேலும் இந்த சமயத்தில் கருவுற்றுருக்கும்
பெண்கள் நேர்மறை எண்ணங்கள் (positive thinking) வளர்த்து கொள்ளுங்கள்.
குழந்தை பற்றிய கனவினை வளர்த்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
Thanks for ur information
ReplyDeleteபயனுள்ள தகவல்👌
ReplyDeleteGood information
ReplyDelete