உடல் நலம் : சருமத்தில் அரிப்புகான காரணங்களும், அதற்கான மருந்துகளும்.

Thursday, June 27, 2019

சருமத்தில் அரிப்புகான காரணங்களும், அதற்கான மருந்துகளும்.






உடம்பில்  மிகவும்  உணர்ச்சியுள்ள  உறுப்பு  நமது  சருமம்.  சருமத்தில் அலர்ஜி  ஏற்பட  பல  காரணங்கள்  இருக்கின்றன.  நமது  உடலில்  கழிவுகள் தேக்கம்,  சில  மருந்துகளினால்  ஒவ்வாமை,  உணவுகளினால்  ஒவ்வாமை, விஷபூச்சி கடி,  இரத்தத்தில்  சர்க்கரையின் அளவு  கூடுதல், உடுத்தும் உடை, உபயோகிக்கும்  சலவை  சோப்பு,  பவுடர் ,  குளியல்  சோப்பு ,  வீட்டில்  உள்ள  தூசி, செல்ல  பிராணிகளின்  முடி,  அவைகளின்  மேல்  வளரும்  ஒட்டுண்ணி  போன்ற காரணங்களால்  உடலின்  அலர்ஜி ஏற்படும்.

அலர்ஜிக்கு வீட்டில உள்ள மருந்துகளை வைத்து குணப்படுத்த முடியும். எந்த முறையை பயன்படுத்தினாலும் நோயின் தீவிரத்தை பொறுத்து நாட்கள் எடுத்து கொள்ளும் , அதனால் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வானதால் அலர்ஜியை குணப்படுத்தமுடியும். ஆங்கில வழி மருந்துகள்அலர்ஜியானை கட்டுப்படுத்தும் தவிர அந்த நோயினை குணப்படுத்தாது.

சருமத்தில்  அரிப்பு  ஏற்பட்டால்  உடலில்  தேங்காய்  எண்ணெய்  தடவ வேண்டும்,  இது  தூசினால்  ஏற்பட்டால்  இது சரியாகி விடும்.  நான்கு  மிளகு எடுத்து  நன்கு  மென்று  சாப்பிட்டு  வெதுவெதுப்பன  சுடு நீர்  ஒரு டம்ளர்  குடிக்க வேண்டும்.  மிளகு  நம்  உடலில்  உள்ள  விஷத்தை  எடுக்கக்கூடிய  தன்மை கொண்டது.  பத்து  மிளகு  இருந்தால்  பகைவன்  வீட்டிலும்  உண்ணலாம்  என்பது பழமொழி.  மிளகு  விஷ  பூச்சி கடிக்கு  சிறந்தது.  தினமும்  நான்கு  மிளகு  எடுத்து மென்று  தின்று,  சுடுநீர் குடிக்க வேண்டும்,  இப்படி 48 நாள்கள் செய்ய வேண்டும். 

மிளகு 
வசம்பு
 வசம்பு  எடுத்து  நசுக்கி  தண்ணீரில்  போட்டு  கொதிக்க  வைத்து  அந்த நீரைவெறும்  வயிற்றில் வாரம் ஒருமுறை குடித்து  வந்தால்  பூச்சி  கடினால் ஏற்படும்  அரிப்பு  சரியாகி விடும்.

வயிற்றில்  உள்ள  கழிவுகளை  வெளியேற்ற  வேண்டும். மாதம்  ஒருமுறை  பேதி  முறையை பயன்படுத்தி  வயிற்றில்  உள்ள  கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இதற்கு  விளக்கெண்ணெய்  பயன்படுத்தலாம். இது   உடலின்  கழிவுகள்  தேக்கம்  அடைவதை  தடுக்கிறது.  மலசிக்கல்  இல்லாமலும் இருக்க வேண்டும்.  மலசிக்கல்  இருந்தால்  கடுக்காய்  பொடியை  பயன் படுத்தவும்.  

 குப்பை மேனி
சரும நோய்க்கு  குப்பைமேனி  சிறந்த  மருந்தாக  பயன் படுகிறது.  குப்பை மேனி,  மஞ்சள்,  வேப்பிலை   அரைத்து  அரிப்பு உள்ள  இடத்தில்  தடவி  ஒருமணி நேரம்  கழித்து  வெது  வெதுப்பான  நீரில்  குளித்து வந்தால் குறைந்து விடும். கொழுந்து  வேப்பிலை  வாரம்  ஒருமுறை  உண்ண வேண்டும்.  இரவு  படுக்கும் முன்  வேப்பிலை  தண்ணீரில்  போட்டு  வேப்பிலை  ஒரு  கைப்பிடி, கல் உப்பு  ஒரு  கைப்பிடி, சேர்த்து  இந்த நீரை  தினமும்  குளித்து  வந்தால்  அரிப்புகொஞ்ச கொஞ்சமாக  குறையும்.

சிறியாநங்கை
மற்றுமொரு  சிறந்த  மருந்து  சிறியாநங்கை  இலை  இதனை  பத்து  இலை எடுத்து  அரைத்து  நெல்லிக்காய்  அளவு  உருட்டி  பதினைந்து  நாட்களுக்கு ஒருமுறை  சாப்பிட  வேண்டும்.  அதாவது  அமாவாசை ,  பௌர்ணமி  போன்ற நாட்களில்  எடுத்து   கொள்ளலாம். இம்மருந்து  இரத்த  சர்க்கரையின்  அளவை குறைக்கிறது.

அருகம்புல்  சாறு  உடலில்  இரத்தத்தை  சுத்தம்  செய்யும்  தன்மை கொண்டது.  அருகம்புல்  கிடைக்காதவர்கள்   அருகம்புல்   பவுடர் உபயோகிக்கலாம்.

உடலில்  தினமும்  தேங்காய்  எண்ணெய்  தடவ வேண்டும். இது அலர்ஜினை குறைக்கிறது. சருமத்தில் அரிப்பு  உள்ளவர்கள்  சோப்பு  உபயோகிக்க வேண்டாம்.  சீயக்காய் தூள் ,  அரப்புத்தூள் ,  பச்சை பயிறு மாவு ,  கடலை மாவு இவற்றை  உபயோகிக்கலாம்.  உணவில்  புளி ,  குறைந்த  அளவு  பயன் படுத்த வேண்டும்.  கருவாடு, பிராய்லர் கோழி ,  ஊறுகாய் ,  எண்ணையில் பொறித்த உணவுப்  போன்றவற்றை உண்ணக்கூடாது. சீரக  நீரை  பயன்படுத்த  வேண்டும். (ac room)குளிரூட்டப்பட்ட  அறையை  பயன்படுத்தக்கூடாது, அல்லது  குறைந்த அளவு  பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment