உடல் நலம் : உணர்ந்தவன் உயர்வான்!! -படித்ததில் பிடித்தது

Wednesday, November 27, 2019

உணர்ந்தவன் உயர்வான்!! -படித்ததில் பிடித்தது


1. தவறோ, சரியோ..
தைரியமாக எதையும்
வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்
யாருக்கும் துரோகியாக மாற மாட்டார்கள்..!!

2.மனிதன் இறுதியாக
இறப்பதற்கு இடையில்
மனதால் பலமுறை இறந்துவிடுகிறான்..!
சிலநேரம் மனிதர்களால்..!
சிலநேரம் மாற்றங்களால்..!

 3.வாழ்க்கையில் தோற்றவர்கள்
இரண்டு பேர்..!
ஒருவர் யார் பேச்சையும்
கேட்காதவர்..!
மற்றொருவர் எல்லோர் பேச்சையும்
கேட்பவர்...                                             

4.பணத்தால் கிடைக்கும் புகழ்
நம்மிடம் பணம் இருக்கும் வரை மட்டுமே நிலைக்கும்..!
குணத்தால் கிடைக்கும் புகழ்
இறந்த பின்னும் நிலைக்கும்..!!

5.இரக்கத்தையும், உறக்கத்தையும், அளவோடு பயன்படுத்துங்கள்..!
அதிகமாக உறங்குபவன் *சோம்பேறி..!*
அதிகம் இரக்கம் காட்டுவான் *ஏமாளி..!!*

6.ஒருவருடன் பேசும்போது
நீங்கள் என்ன அர்த்தத்தில்
பேசுகிறீர்கள் என்பதைவிட..!
நீங்கள் கூறுவதை
அவர் எந்த அர்த்தத்தில்
புரிந்து கொள்கிறார்
என்பதை கவனித்து பேசுங்கள்..!

7.வெற்றியின் போது
கை தட்டும் அந்த
பத்து  விரல்களை விட..!
தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும்
அந்த ஒரு விரலுக்கு தான்
மதிப்பு அதிகம்..!

8. சிலபேர் நமக்காக நிறைய செய்வாங்க..
ஆனால்..!
ஒன்னும் பண்ணாத மாதிரி காட்டிப்பாங்க..!
அந்த அன்பை
என்ன விலை கொடுத்தாலும்
வாங்க முடியாது..!

9.நீங்கஆசைப்பட்ட வாழ்க்கையை
உன் இஷ்டம்போல் வாழ்ந்து விடுங்கள் ..!
பிறர் சொல்வதைக்கேட்டு
உங்கள் ஆசைகளை
அடமானம் வைத்து விடாதீர்!
பின்பு மீட்கமுடியாது
உங்கள் வாழ்வில்
நீங்கள் தொலைத்த ஆசைகளை..! ஆனால் அந்த ஆசைகள் பிறர் குடியை கெடுப்பதாய் இருக்க கூடாது.

10. பலர் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பது
திறமை இல்லாமல் அல்ல..!
நேர்மையான எண்ணங்கள்
நியாயமான வாழ்க்கை முறை கூட இருக்கலாம்..

11.வசதியாக வாழ்வதற்கு தான் *வருமானம்* தேவை..!தகுதியோடு வாழ *தன்மானம்* இருந்தால் போதுமானது. உங்களை

12.வெறுப்பவர்களை நினைத்து கவலை கொள்ளாதே..!
அவர்களுக்கு உங்கள் அன்பை பெற
தகுதி இல்லை என
நினைத்து கொள்ளுங்கள்..!

13.என்னடா வாழ்க்கை இது
என்று நினைப்பதை விட,
இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை
என்று எண்ணி வாழுங்கள்
வெற்றி நிச்சயம்..!

14.பலசாலிகள் என்று யாரும் இல்லை..!
மற்றவர்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு தான்
இங்கே பலபேர் பலசாலிகளாக காட்டுகிறார்கள்..!

15.செய்யும் செயலை
முழு மனதோடு செய்யுங்கள்..!
வெற்றி கிடைக்கவில்லை என்றாலும்
நிச்சயம் நிம்மதி கிடைக்கும்..!

16.உறுதியான
உள்ளம்
உடையவருக்கு..!
ஒவ்வொரு
விடியலும்
பொற்காலமே..!         

17.உள்ளே தள்ளும் உணவு
ருசியாக இருக்க வேண்டும்
என்று நினைக்கும் நாக்கு..!
வெளியே தள்ளும்
வார்த்தையில் மட்டும்
எதையும் நினைப்பதில்லை..!       

18.மற்றவர் தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட,
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
உலகிற்கு காட்டுவதே சிறந்தது..!

19.வாழ்க்கை எப்படி வேண்டும் என்றாலும் மாறட்டும்..!
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்..!

20.இதுவும் கடந்து போகும்..!
ஆனால்..
எதுவும் மறந்து போகாதே..!           

21.வெற்றி நிரந்தரமல்ல..
தோல்வியும் நிரந்தரமல்ல..
இன்பம் நிரந்தரமல்ல..
துன்பமும் நிரந்தரமல்ல..
என்றும் நிரந்தரமாய் விளங்குவது
சிரிப்பும் மற்றவர் மீது நம் காட்டும் அன்பும் தான்..!                                   

22.பிரச்சனை சிறிதோ, பெரிதோ
தனியாக சமாளித்து கொள்ள பழகு..!
அப்போதுதான்
உன் பலம் என்ன
பலவீனம் என்ன
என்பதை உன்னால்
அறிய முடியும்..!                                             

23.அடியே படாமல் வலிக்க செய்வது வார்த்தைகள் மட்டுமே..!
மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவது
அன்பான ஆறுதல் மட்டுமே..! 

24.வெற்றியே
மகிழ்ச்சி
என்று
நினைக்காதே..!
மகிழ்ச்சியாய்
இருந்தாலே
வெற்றி
என்று நினை..!

25. ஓட்டமிடும் உன் வாழ்வை,
நோட்டமிடும் உலகம் இது,
மறந்துகூட விழுந்து விடாதே..!
மாண்டு விட்டான் என்று சொல்லி,
மண்ணிற்குள் புதைத்து விடுவார்கள்..!! பிறரை குறைத்து பேசி
உன் மதிப்பை கூட்ட நினைக்காதே..!
அப்படி செய்வதால்
கூடுவது உன் தலைகணமே தவிர
மதிப்பல்ல..!
உணர்ந்தவன் உயர்வான்..!


No comments:

Post a Comment