உடல் நலம் : காய்ச்சல் குணமாக என்ன செய்யலாம்

Wednesday, November 13, 2019

காய்ச்சல் குணமாக என்ன செய்யலாம்



சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.
காய்ச்சல்காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.
காய்ச்சல் – சாதாரண ஜூரத்திற்கு
இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.உலர் திராட்சை
இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )
என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை உமிழ் நீரில் ஊர வைத்து பிறகு சாப்பிடவும் .

No comments:

Post a Comment