உடல் நலம் : பிரசவத்திற்கு பின்னர் மாதவிடாய் ஏற்படும் மாற்றங்கள்

Monday, November 25, 2019

பிரசவத்திற்கு பின்னர் மாதவிடாய் ஏற்படும் மாற்றங்கள்






குழந்தை பிறப்பிற்கு பின் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் நிறம் மாறி இருக்கும். மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது. இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தை பிறப்பிற்கு பின் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் நிறம் மாறி இருக்கும். முதலில் அது சிவப்பு நிறத்திலும், பின் சற்று நிறம் குறைந்தும் இறுதியில் லேசான பழுப்பு நிறத்திலும் இருக்கும். அதன் பின் லேசான மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும். இறுதியில் இந்த மாதவிடாயானது இரத்தமாக இல்லாமல், அதிக உறைந்த நிலையிலும் உலர்ந்தும் இருக்கும். இது படிப்படியாக குறைந்து இறுதியில் நின்று விடும். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மோசமான துர்நாற்றம் வீசியதாக கூறுகிறார்கள்.

இருப்பினும், இந்த மகப்பேற்று இரத்தப் போக்கானது ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும், ஆனால் சில பெண்களுக்கு அதற்கு மேலும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அது கவலைக்குரியதல்ல. இந்த வெளியேற்றங்களின் போது வலி ஏற்பட்டாலோ அல்லது எதாவது தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது இரத்தம் கட்டிகளாக வெளியேறினாலோ மருத்துவரை சந்தியுங்கள்.

தாய்ப்பால் உடலில் உள்ள சுரப்பிகளை தூண்டுகிறது. குழந்தை தாயிடம் பால் குடிக்கும் போது, உடலில் புரோலேக்ட்டின் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் வரை பாய்கிறது. புரோலேக்ட்டின் உடலிலிருந்து கரு முட்டை வெளிப்படுவதை தவிர்க்கிறது. இதனால் உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது.

மாதவிலக்கு ஏற்பட்டாலும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். இதனால் பாலின் சுவையில் மாற்றம் ஏற்படாது. மாதவிடாய் காலத்திலும் தாய்ப்பால் பாதுகாப்பானதே. இதன் காரணமாக தாய்ப்பாலின் அளவு குறையலாம். இது தற்காலிகமானதே தவிர நிரந்தரமல்ல. சிறிது நாட்களில் மீண்டும் பழைய படி அதிகரித்து விடும். இது உடலில் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது

No comments:

Post a Comment