உடல் நலம் : கோரைக்கிழங்கின் மருத்துவ பயன்கள்:

Wednesday, November 20, 2019

கோரைக்கிழங்கின் மருத்துவ பயன்கள்:




"கோரை என்னும் ஒருவகை புல்லிலிருந்து பெறப்படுவது கோரைக்கிழங்கு. இதன் மற்றொரு பெயர்  வராகபட்சணி என்பதாகும்."

கோரைக்கிழங்கு, மூங்கில் இலை, பாதிரி வேர், திரிபாலை இவற்றை சம அளவு எடுத்து, 800 மில்லியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர  மேகநோய் குணமாகும்.

கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, அதனுடன் 3 மடங்கு ஆவாரை பொடி சேர்த்து தினமும் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படுகின்ற நாற்றம் நீங்கும்.

கோரைக்கிழங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி, பேரரத்தை, செஞ்சந்தனம் இவற்றை சம அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர, 2-3 நாட்களில் சுரத்துடன் கூடிய  குணமாகும்.

கோரைக்கிழங்கு உடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட குடலில் உள்ள பூச்சிகளை அழிக்கும். சீதக்கழிச்சலைக் குணமாக்கும்.

கோரைக்கிழங்கை பொடி செய்து ஒரு கிராம் அளவு எடுத்து காலை, மாலை இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நல்ல நினைவுத்திறன் உண்டாகும். இது காசநோயையும் குணமாக்கும்.

பச்சை கோரைக்கிழங்கை அரைத்து பாலூட்டும் தாயின் மார்பில் பூசி வர பால் அதிகம் சுரக்கும்.

கோரைப் பாயில் படுத்து தூங்க பசி மந்தம், சுரம் ஆகியவை குணமாகும். உடலுக்கு  குளிர்ச்சியும், நல்ல உறக்கமும் உண்டாகும்.


No comments:

Post a Comment