உடல் நலம் : வீட்டு கை வைத்திய முறைகள்

Sunday, November 10, 2019

வீட்டு கை வைத்திய முறைகள்



கை வைத்திய முறைகள் என்பது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் எளிய மருத்துவ முறையாகும்.


  • கீழே விழுந்து அடிபட்டால், திரிபலா சூரணம் நீரில் கொதிக்க வைத்து தெளிவான கஷாயத்தில் காயத்தைக் கழுவி பிறகு திரிபலா சூரணத்தைக் காயத்தின் மீது தூவி விடவும்.
  • காயத்திற்கும், இரத்த கசிவு அதிகமாக இருந்தாலும் அரக்கு சூரணத்தைக் காயத்தில் வைத்துக் கட்டவும்.
  • சளி, இருமலுக்கு தாளிசாதி சூரணத்தைக் குழைத்துத் தேனில் அடிக்கடிக் கொடுக்கவும்.
  • இருமலுக்கு ஆடாதோடைக் கஷாயம் தேனுடன் அடிக்கடி சாப்பிடலாம்.
  • புண்களுக்கு வேப்பிலை, மஞ்சள், ஆலம்பட்டை, அரசம்பட்டை கசாயத்தில் கழுவவும். திரிபலா சூரணத்தைப் புண்ணில் அப்பி விடவும்.

  • வெள்ளைப்படுதலுக்கு கீழாநெல்லிக் கஷாயம் மற்றும் நெல்லிக்காய்த் தூளில் பனை வெல்லம் கலந்து சாப்பிடவும்.
  • தலைவலிக்கு இரண்டு சொட்டு நொச்சித் தைலத்தை மூக்கின் துவாரங்களில் செலுத்தவும். தலையில் நொச்சித் தைலத்தைத் தராளமாகத் தடவவும்.
  • உடலில் எந்த அங்கங்களில் வலி தோன்றினாலும் சூடாகத் தைலத்தைத் தடவவும்.
  • குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசிச் சாற்றைத் தேனில் கலந்து கொடுக்கவும்.
  • சொத்தைப் பல்லின் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ளவும்.
  • கால் சுளுக்கினால் சூடாக உப்பு + புளி பற்றுப் போடவும்
  • தலையில் அடிபட்டுக் காயம் இல்லாமல் வீக்கம் மட்டும் இருந்தால் முருங்கை இலையைப் பற்றுப் போடவும்.
  • குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு இடுப்பில் தைலம் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும். வெற்றிலைக் காம்பினை விளக்கெண்ணையில் தோய்த்து ஆசன வாயில் வைக்கவும்.
  • வயிற்றுப் போக்கிற்கு முக்கியமாக குழந்தைகளுக்கு ஜாதிக்காயை இழைத்து தேனில் பலமுறை கொடுக்கவும்

  • .வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய், சுக்கு, சர்க்கரை கலந்து கொடுக்கவும். வலியுள்ள பகுதிக்கு சூடாக தைலம் தடவவும்.
  • வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கருப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை சமஅளவு சேர்த்து சாப்பிடவும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்ளலாம்.
  • வயிற்று வலிக்கு ஓமத்தை அரைத்து மோரில் கலந்து கொடுக்கவும்.
  • பால் செரிக்காமல் வயிற்றுப் போக்கு ஏற்படுமானால் பாலுடன் நீர் கலந்து, சுக்கும் கோரைக்கிழங்கும் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கவும். பால் நன்றாகச் செரிக்கும்.
  • மலம் சரிவரப் போக சுக்கு வெந்நீரில் 1-2 ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து சாப்பிடலாம்.
  • இஞ்சிச்சாறும், சின்ன வெங்காயச் சாறும் கலந்து வாந்தி, குமட்டல் போன்றவற்றிற்குக் கொடுக்கலாம்.
  • இஞ்சிச்சாறு, புதினா, உப்பு, வெங்காயம் கலந்து கொடுப்பது அஜீரணம், குமட்டல், பசியின்மை, வயிற்று உப்புசம் இவற்றிற்கு நல்லது.
  • குழந்தைகளின் சளிக்கு துளசி + வெற்றிலைச்சாறு தேனுடன் கலந்து கொடுக்கவும்.
  • குழந்தைகளின் சளிக்கு வேப்பெண்ணெய்யை மார்பு, முகுதுப் பகுதியில் தடவவும். வேப்பெண்ணையை உள்ளுக்கும் கொடுக்கவும்.
  • தீப்புண்களுக்குச் சோற்றுக் கற்றாழையின் உள் பகுதியிலுள்ள சோற்றைத் தடவவும்.

No comments:

Post a Comment