நீ இன்னும், உன் இழப்பை நினைத்தே வருந்திக் கொண்டிருக்கிறாயே, உன் இழப்பு என்பது மிக பெரியதுதான் ஆனால் அதற்காக அதையே நினைத்துக் கொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? உன்னிடம் இருந்து போன எந்த பொருளுக்காகவும் வருந்தாதே, என்றோ ஒரு நாள் அது உன்னை விட்டு போகத்தான் போகிறது அல்லது நீ அதை விட்டுப் போகத்தான் வேண்டும். எதுவும் நிரந்தரம் அல்ல. ராஜாக்கள் கூலிகளாக ஆவதும், கூலிகள் ராஜாக்கள் ஆவதும் உலக இயல்பு. எது உன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதோ, அதை போன்று ஆயிரம் மடங்கு உனக்கு கிடைக்கும். அது கிடைக்க நீ தைரியத்தோடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் வரத்தான் போகிறது என்பதை உணர்ந்து கொண்டால் இதுபோன்ற இன்பதுன்பங்களில் நீ சிக்கக்கொள்ளவும் மாட்டாய்.. மாறாக, எல்லாவற்றையும் நடுநிலையோடு நின்று கவனித்து வருவாய். எல்லாம் புரிகிறது ஆனால் இன்னுமும் எனக்கு கஷ்டம் தொடர்கிறதே நான் என்ன செய்வது என்ற கேள்வி உன் மனதில் எழுகிறது! குழந்தையே ஒருவேளை நீ தொடர்ந்து துன்பத்தையே அனுபவிக்க நேர்ந்தாலும் இதுவும் இந்த சாயியின் அனுகிரகம் என்று நினைத்துக்கொள். இந்த துன்பம் உனது கடந்தகால தவறுக்கு நீ கொடுத்துள்ள விலை என்பதை உணர்ந்து கொள். எப்போதும் சாயி பாபாவாகிய என் அப்பா என்னுடன் கூடவே இருக்கிறார் என்று உறுதி கொள். ஒருவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் போது, கூடவே அவரை கவனித்துக்கொள்ள ஒருவர் இருப்பார் அல்லவா? அப்படி தான் குழந்தையே, நீ கஷ்டத்தில் இருக்கும்போது நான் உன் கூடவே இருக்கிறேன். தைரியமாக இரு! உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்........................... சாயியின் குரல்
Wednesday, November 20, 2019
அன்புக் குழந்தையே!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment