உடல் நலம் : வாழைப்பழத்தின் மகிமை

Monday, November 11, 2019

வாழைப்பழத்தின் மகிமை




நாம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். தரத்திற்கு தகுந்தவாறு ரூபாய் 4லிருந்து கிடைக்கிறது. இந்த பழத்தை விட்டால் மற்ற பழங்கள் விலை அதிகமாகத்தான் இருக்கும். வாழைப்பழத்தில் நமக்கு தெரியாத மருத்துவ பலன்கள் இருக்கின்றன.

பொட்டாசியம் அதிகம் உள்ள பழம் வாழைப்பழம். Cancer நோயிலிருந்து விடுபட இந்த பழம் மிகவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் வரும் பட்சத்தில் அது அழுகிவிட்டது என்று நினைப்பது தவறு. கரும்புள்ளிகள் வரத்தொடங்கும்போது, அது சரியான பக்குவத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்று பொருள். இந்த நிலையில் இதை சாப்பிடும்போது, இதில் உள்ள TNF என்ற காரணிகள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பலம் சேர்க்கிறது.

வாழைப்பழத்தை தனியாக சாப்பிடலாம். தேனுடன் கலந்து சாப்பிடலாம். பாலுடன் கலந்து milkshake ஆக சாப்பிடலாம். தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவதனால் இந்த பலன்கள் கிடைக்கின்றன.

1) மலச்சிக்கல் நீங்கிவிடும்;

2) எலும்புகள் வலுவடையும்;

3) ரத்த ஓட்டம் சீரடையும்;

4) நினைவு சக்தி கூட ஆரம்பிக்கும்;

5) கண் பார்வை தெளிவடையும்;

வாழைப்பழம் சாப்பிட்டவுடன், உடனடியாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. விளையாட்டு வீரர்கள், ஓடி முடிந்தவுடன், ஒரு வாழைப்பழம் சாப்பிட, சக்தி பெருகி உடலில் உடனே தெம்பு கிடைக்க ஆரம்பித்து விடும்.

இது ஒரு அதிக செலவில்லாத மற்றும் எந்த வித கெடுதலும் செய்யாத உணவு மற்றும் மருந்து.

No comments:

Post a Comment