உடல் நலம் : சுயமரியாதை!

Saturday, November 23, 2019

சுயமரியாதை!



ஹோட்டல் ஒன்றிற்கு அப்பா தனது இரு மகன்களை அழைத்து வருகிறார்...! வந்தவர் அந்த இரு சிறுவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்காமலே மூவருக்கும் இட்லி கொண்டு வர சொல்கிறார்...!

 சிறுவர்கள் இட்லி வேண்டாம் அப்பா! சப்பாத்திதான் வேண்டும் என்கின்றனர்...! அப்பா இட்லி போதும் ...! இதைச் சாப்பிடுங்கள் என்கிறார்...! அப்பாவிடம் சப்பாத்தி வாங்க பணமில்லை என்ற விவரம் தெரியாமல் இட்லி சாப்பிட தயங்குகின்றனர் சிறுவர்கள்..!

அந்த சமயத்தில் படித்த பணக்கார இளைஞன் ஒருவன் சாப்பிட வருகிறான்...! அவனைக் கண்டதும் சர்வர் வாங்க சார் என்று வரவேற்று என்ன வேண்டும் சார் என்று கேட்கிறான்...!

இளைஞன் நெய் ரோஸ்டுக்கு ஆர்டர் கொடுக்கிறான்...! சர்வர்  மணக்க  மணக்க நெய் ரோஸ்ட் கொண்டுவந்து வைக்கிறான் ...! அப்போதுதான் தன் அருகில் இருக்கும் சிறுவர்களையும் அவர்களது அப்பா வையும் கவனிக்கிறான் இளைஞன்...!

உடனே சர்வரை அழைத்து என்னப்பா நெய் ரோஸ்ட் ! வாயிலேயே வைக்க முடியலியே! இதை எடுத்துட்டு போ! போயி இந்த சிறுவர்களுக்கு வைத்தது போல எனக்கும் இட்லி கொண்டு வா என்கிறான்...!

சார்.! நல்ல நெய் சார்...,! உங்களுக்காக ஸ்பெசலாக போட்டது என்கிறான் சர்வர்...!
ஏய் ! நான் சொன்னதைச் செய் என்கிறான் இளைஞன்...!
சர்வரும் நெய் ரோஸ்டை எடுத்துக் கொண்டு போய், இட்லி கொண்டு வந்து வைக்கிறான்...!

இளைஞன் மகிழ்வோடு இட்லியை சாப்பிடுகிறான்...!
இதைப் பார்த்த அந்த சிறுவர்களும் இட்லியை ஆவலுடன் சாப்பிடுகின்றநர்.

ஆனால் இதில் எவ்வளவு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன..!
அந்த இளைஞன் நினைத்தால் அந்த சிறுவர்களுக்கும் நெய் ரோஸ்ட் வாங்கி கொடுத்திருக்க முடியும்...!

அப்படி செய்தால் அந்த அப்பாவின் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும்...! அப்பாவின் இயலாமையை எடுத்து காட்டுவதாக அமையும்...! அப்பாவின் மேல் சிறுவர்களுக்கு மதிப்பு குறையும்...!

இவ்வளவும்  அந்த இளைஞனின் செயலால் காப்பாற்ற பட்டு விட்டன !
இது பணக்கார இளைஞர்கள் பண்பாட்டை,பிறரின் சுய மரியாதையை எப்படி காக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்...!

படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன்.

No comments:

Post a Comment