உடல் நலம் : அமானுஷ்ய சக்திகள் கொண்ட ஆகாச கருடன் கிழங்கு.!

Tuesday, October 29, 2019

அமானுஷ்ய சக்திகள் கொண்ட ஆகாச கருடன் கிழங்கு.!

ஆகாச கருடன் கிழங்கு.!இம் மூலிகை காடுகள்,வனங்களில்மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.



                  சுமார் 5வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடுமலைகளுக்குச்   சென்று  இக்கிழங்கை சேகரித்து கொண்டு  வந்து நாடு , நகரங்களில் கூவி    கூவி விற்பார்கள்நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு   வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன்  பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்அதே போல் இக்   கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று   விடும்ஓடி விடும்.இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் 
அளிக்கும்.

உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது."சாகா மூலிஎன்ற பெயரும் இதற்கு உண்டுஆம் இம் மூலிகைக் 
கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்  வாழும் சக்தி கொண்டது
முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.

இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டுஅதாவது 
வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டிதோஷங்களை போக்கும் தன்மைகொண்டது
மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லிசூன்யம்போன்றமாந்திரீக எதிர் 
வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தன்மை 
கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக  தீய விளைவுகளில் 
இருந்து காக்கடுர்.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள் (பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.


ஆகாச கருடன் கிழங்கு நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.

No comments:

Post a Comment