உடல் நலம் : மணலிக்கீரையின் மருத்துவ குணங்கள்....

Sunday, October 27, 2019

மணலிக்கீரையின் மருத்துவ குணங்கள்....




மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

மணலிக் கீரை, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் நீர் கொட்டுதல் குறையும்.

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்குத் தேவையான சத்து கிடைக்கும்.

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.

நுரையீரல் மற்றும் மார்பில் சளி குறைய மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வருவது நல்லது.

No comments:

Post a Comment