உடல் நலம் : மூலம் வராமல் தடுக்க, மற்றும் மூலநோயை குணமாக்கும் வழிமுறைகளும், மருத்துவ குறிப்புகளும்...

Monday, October 7, 2019

மூலம் வராமல் தடுக்க, மற்றும் மூலநோயை குணமாக்கும் வழிமுறைகளும், மருத்துவ குறிப்புகளும்...




இன்றைய வழக்கைச் சூழலில் பெரும்பான்மையானோர் மூல நோயாலும் மலச்சிக்கலால் பெருமளவு பாதிப்படைந்து வருகின்றோம். இந்த மூல நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் நாளடைவில் மோசமான பாதிப்புகளை நாம் அடைய நேரிடும்.

1.மூலநோயின் ஆரம்பம் மலச்சிக்கல் ஆகும். மலச்சிக்கல் பிரச்சினை நமக்கு வராமல் தடுத்து விட்டால் மூலநோயும் நம்மை அண்டாது.

2.மூல நோய் உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், என்று வகைப்படும். இதில் இரத்த மூலம் மிகவும் ஆபத்தானதும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.

3.சரியான உணவுகளையும், பழக்கவழக்கங்களையும், பின்பற்ற வேண்டும்.

4.உடல் அதிக சூடு அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5.இரவில் அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழிப்பதால் உடல் சூடாகின்றது. உடல் சூடாவதால் மலக்குடல் சுருங்கி மலம் கெட்டியாகின்றது. பின்பு நாம் மலம் கழிக்க அதிக சிரமப்படுகின்றோம். இதன்னால் மலச்சிக்கல் உண்டாகின்றது.

6.இவ்வாறு மலச்சிக்கல் நாளுக்கு நாள் வளர்ந்து மூலநோயாக மாற்றமடைகின்றது.

7.பிறகு நாம் அதிக சிரமப்பட்டு முக்கி முனகி மலம் கழிக்கும் போது நமது ஆசனவாயில் தசைநார்கள் கிழிந்து மலத்துடன் இரத்தபோக்கும் உண்டாகின்றது. இதனையே இரத்த மூலம் என்று கூறுகின்றனர். இந்த இரத்த மூலத்தை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிறிது நாட்களில் நமது உடலில் இரத்தப்போக்கு அதிகமாகி ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைந்து உயிரிழக்கும் சூழலும் உண்டாகலாம்.

8.இந்நோயில் இருந்து விடுபட முதலில் நாம் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் 9 முதல் 10 மணிக்குள் படுத்து உறங்க வேண்டும்.

9.இரவில் படுப்பதற்கு முன் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுக்க வேண்டும். தொடர்ந்து இரவில் பால் அருந்தினால் மலச்சிக்கல், ஆசனவாயில் உள்ள புண்கள் படிப்படியாக சரியாகிவிடும். இரத்தபோக்கும் கட்டுப்படும்.

10.அதிகளவில் நீர் அருந்த வேண்டும். அதிகளவில் நீர் அருந்துவதால் நமது உடல் சூடாவது தடுக்கப்படும்.

11.மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளான மாமிசம், புளித்த உணவுகள், காரமான உணவுகள், விரைவு உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

12.நார் சத்துக்கள் நிறைந்த கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளவேண்டும்.

13.கம்பு,கேழ்வரகு,மக்காச்சோளம்,தினை, போன்றவற்றை சேர்த்து அரைத்து மாவாக்கி கொதிக்கவைத்து கூடவே பால் சேர்த்து தினமும் அருந்திவர மலச்சிக்கல் உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம், இரத்தபோக்கும், படிப்படியாக சரியாகி ஒரு மாதத்திற்குள் மூலம் சரியாகிவிடும்.

14.உடன் தினமும் சர்வாங்க ஆசனம், ஏகாபாத ஆசனம், பச்சி மோத்தாசனம், போன்ற ஆசனங்களையும் தினமும் செய்து வர மலச்சிக்கல், உள்மூலம்,வெளிமூலம், இரத்தமூலம், ஆகிய மூலநோயில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

15.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட நேரமாக சீட்டில் அமர்ந்து வண்டி ஓட்டுவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

16.அதிகபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்திடல் நலம். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஆசனவாய் சூடாகும். அதனால் தசைநார்கள் சுருங்கி மலச்சிக்கல் ஏற்படும்.

No comments:

Post a Comment