உடல் நலம் : உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியையும் கொடுக்கும் உன்னதமான கஞ்சி

Thursday, October 31, 2019

உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியையும் கொடுக்கும் உன்னதமான கஞ்சி

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை



காயமே (உடலே) மருத்துவர் !!
                    காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
            மருந்தை உணவாக்காதே !!!

கீரைகள்  " நடமாடும் சித்தர்கள் "


தலைப்பு   : இளைத்த உடலை பெருக்கவும் , கபத்தை கரைக்கவும் மற்றும் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியையும் கொடுக்கும் உன்னதமான கஞ்சி
----------------------------------------------

பாதாம் பருப்பு பச்சரிசிக் கஞ்சி
---------------------------------------------------

தேவையான பொருட்கள்
---------------------------------------------
பச்சரிசி நொய்.             -  250 கிராம்

பாதாம் பருப்பு.               -    30  கிராம்

சுரைக்காய் விதை.       -   20 கிராம்

வெள்ளரி விதை.          -    20 கிராம்

கசகசா.                           -    10 கிராம்

தேங்காய் துருவல்.      -   50 கிராம்

சீரகம்.                             -  ஒரு தேக்கரண்டி

பூண்டு.                            -   6 பல்

உப்பு.                     -  தேவையான அளவு

செய்முறை
-------------------------------------
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

அதில் பச்சரிசி நொய்யை சேர்த்து நன்கு  கொதிக்க வைக்கவும்.

தேங்காய் துருவல் , கசகசா , பூண்டு இவை மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சரிசி நொய் நன்கு வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து  மற்றும் இதனுடன் பாதாம் பருப்பு , சுரைக்காய், வெள்ளரி விதை  மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி  கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து இளம் சூட்டில் பருக வேண்டும்.

பயன்கள்
--------------------
இந்த கஞ்சியை உடல் இளைத்தவர்கள் குடித்து வந்தால் உடல் பருக்கும்.

உடல் சூடு தணித்து குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெஞ்சில் உள்ள கபத்தைக் கரைக்கும் மற்றும் இருமலுக்கு அருமருந்தாகும்.

படுக்கப் போகும் முன்
---------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

நன்றி ,
கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.


No comments:

Post a Comment