உடல் நலம் : கண்டங்கத்திரி –மற்றும் கறிமுள்ளி மருத்துவ பயன்கள்

Wednesday, October 30, 2019

கண்டங்கத்திரி –மற்றும் கறிமுள்ளி மருத்துவ பயன்கள்




கண்டங்கத்திரி.

கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
பழங்குடி மக்கள் கண்டங்கத்திரி பழச்சாற்றை காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர்.

கண்டங்கத்திரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது. கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. கண்டங்கத்திரி காயை சமைத்து சாப்பிடலாம்.

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்மருந்தாக சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

  மருத்துவ குணம் கொண்ட கறிமுள்ளி.

கறிக்குதவா_நின்ற முள்ளிக்காயானது வர்தபித்த கபதோஷங்கள், சுரம், சுவாசரோகம் ஆகிய இவைகளை நீக்கும்

கறிமுள்ளி தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் நீலநிறமான பூக்களையும் வெள்ளை வரியுடைய உருண்டையான காய்களையும் மஞ்சள் நிறப் பழங்களையும் உடையது. பாப்பாரமுள்ளி, என்ற மாற்றுப் பெயரும் உண்டு.

கறிமுள்ளி தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கின்றது. கறிமுள்ளி இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இவை கோழையை  அகற்றும்; சிறுநீர் மற்றும் வியர்வையை அதிகமாக்கும்.

கறிமுள்ளி இலைச்சாறு 3 தேக்கரண்டி, சிறிதளவு தேன்கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம், 3 நாட்கள் குடிக்க சளி குணமாகும்.

கறிமுள்ளி செடியை நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொண்டு, சம அளவு கற்கண்டுத் தூள் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இதில், ½ தேக்கரண்டி அளவு, தேவையான அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.

பல் புழுவிற்கு இந்த கறிமுள்ளி செடியின் விலைதான் பயன்படும். கண்டங்கத்திரி விதை பயன்படாது.

No comments:

Post a Comment