உடல் நலம் : கை கால் நடுக்கம் நரம்பு தளர்ச்சி நீங்க..

Sunday, October 27, 2019

கை கால் நடுக்கம் நரம்பு தளர்ச்சி நீங்க..



அதிக வேலைப்பளு, மனஉளைச்சல். நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.


நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே இருளாகிவிட்டது என்ற தவறாகப் புலம்பக்கூடாது.

கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னை அறியாமல் குழப்பமடைவதாலும், பல்வேறு பரபரப்புகளும்- படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும், அசதியுடனும் காணப்படுவர்.

நரம்பு தளர்ச்சி நோயாளிகளிடம் வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை நாம் பார்க்க முடியும். படபடப்புடன் காணப்படுவார்கள். உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

நரம்பு தளர்ச்சி நீங்க:

பேரீச்சம்பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து நாட்டு பசும்பாலில் ஊறவைத்து பின் கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஞாபகசக்தி கூடும். கை கால் தளர்ச்சி குணமாகும்.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.
இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது வசம்பு.

No comments:

Post a Comment