நமது மூக்கை சுற்றி, நான்கு காற்று பைகள் இருக்கிறது. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படுகிறது. சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு ‘சைனசிட்டிஸ்‘ என்று பெயர்.மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் ‘பாலிப்‘ எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்சினை வருகிறது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது.
அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சைனஸ் அறிகுறி (Sinus Symptoms)
- மேல் தாடை, கீழ் தாடைகள் இணையும் பகுதி மற்றும் முகத்தில் வலி உண்டாகும். குறிப்பாக மூக்கைச் சுற்றியுள்ள பகுதியில் அதிக வலியை உணரக்கூடும்.
- சளி மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலேயோ வெளியேறும்.
- வாய் மற்றும் மூக்கில் சுவாசிக்கும் போது சுவாசத்தில் நாற்றம் வருதல்.
- காதின் மடல் பகுதியில் வலி உண்டாகும். காது கேட்கும் திறனில் மந்த நிலை உண்டாகும்.
- சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். இரவு நேரத்தில் இருமல் வரும்
- இரவு நேரத்தில் இருமல் வரும்.
- காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மல் வரும்
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம்
- அதிமதுரம்.
- ஆடாதோடை.
- கண்டங்கத்திரி.
- சித்தரத்தை.
- தாளிசப்பத்திரி.
- திப்பிலி.
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் செய்முறை
சைனஸ் குணமாக இயற்கை மருத்துவம், மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து சலித்து, வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும். 1ஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 1/2 டம்ளராக வற்றியதும் மிதமான சூட்டில் அருந்தவும்.
இந்த சைனஸ் குணமாக இதை தவிர ஒரு சிறந்த வைத்தியம் எதுவும் இல்லை. எனவே சைனஸ் குணமாக இந்த பாட்டி வைத்தியம் குறிப்பினை பின்பற்றுங்கள்.
No comments:
Post a Comment