உடல் நலம் : உங்கள் குழந்தை உடல் மெலிந்து இருக்கானா ?....வயிற்றில் புழுக்கள் இருக்கிறதா?

Monday, October 7, 2019

உங்கள் குழந்தை உடல் மெலிந்து இருக்கானா ?....வயிற்றில் புழுக்கள் இருக்கிறதா?


 பாட்டி வைத்தியம்..!!




சிறுவயதில் நாம் அதிகளவில் இனிப்பு சுவையுள்ள பண்டத்தை சாப்பிட்டாலோ அல்லது சீனியின் மீதுள்ள ஈர்ப்பால் பெற்றோருக்கு தெரியாமல் சீனியை சாப்பிட்டு வந்தால் அதிகளவு இனிப்பை சாப்பிடத்தான் விளைவாக வயிற்றில் புழுக்கள் உண்டாகும்.

இதனை குறைப்பதற்காகவே அதிகளவில் இனிப்பு சுவையை சாப்பிட்டோம் என்றால் பெற்றோர்கள் சிறுவயதில் புழு கடிக்கும்., அதிகளவு இனிப்பு சுவைகளை சாப்பிட கூடாது என்று எச்சரித்து வருவார்கள். அந்த வகையில்., அதிகளவு இனிப்புகளை சாப்பிட்டு வயிற்றல் பூச்சி தொல்லை ஏற்பட்டால் செய்ய வேண்டிய இயற்கையான மருத்துவம் குறித்து காண்போம்.


  • நமது குழந்தையின் வயிற்றில் புழுக்கள்  இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தவுடன் வசம்பை பொடியாக்கி., சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவிவிட்டால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.



  • நமது குழந்தையின் வயிற்றில் புழுக்கள்  இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தவுடன் தித்திப்பான மாதுளை பழத்தை இரவில் வழங்கிவிட்டு பின்னர் மறுநாள் காலையில் பாலில் சிறிதளவு விளக்கெண்ணையை சேர்த்து கொடுத்தால் வயிற்றல் இருக்கும் புழுக்கள் அனைத்தும் வெளியேறும்.



  • நமது குழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தவுடன் அந்த புழுக்கள் கொக்கி புழுக்களாக இருக்கும் பட்சத்தில்., துளசி சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறுகளை சேர்த்து குடித்து வந்தால் புழுக்கள் வெளியேறும்.



  • கொட்டை பாக்கை எடுத்து கொண்டு சந்தனம் போல மையாக இடித்து காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு பாலுடன் சேர்த்து கொடுத்து வந்தால் புழுக்கள் அனைத்தும் வெளியேறும். இந்த முறையில் அவர்களின் வயதிற்கேற்ப மருந்தை வழங்க வேண்டும்.



  •  வேப்ப மரத்தில் இருக்கும் கொழுந்துடன் சிறிதளவு உப்பை சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால்., புழுக்கள் இறந்து வெளியேறும்.



  • சீரக பொடியை ஒருஸ்பூன் அதனுடன் சிறிது வெண்ணை சேர்த்து குழைத்து ஒரு சிறு உருண்டையாக உருட்டி வெறும் வயிற்றில் மூன்று தினம் மட்டும் சாப்பிட்டு வந்தால்  வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.


No comments:

Post a Comment