உடல் நலம் : சர்க்கரை வள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள் !

Sunday, October 20, 2019

சர்க்கரை வள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள் !




பொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நாம் அறிந்து இருக்கிறோம்.

ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் #உடல் எடை அதிகரிக்காது .

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகஅளவில் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் வேறு சில முக்கிய சத்துக்களும் உள்ளன.

அவை ,வைட்டமின் ஏ,வைட்டமின் சி ,இரும்பு சத்து,மெக்னிசியம்,கால்சியம் ,நார்சத்து ,பொட்டாசியம் ,பிட்டா கரோட்டின்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பைபர், நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது வயிறு நிரம்புவது போன்ற உணர்வு, செரிமானப் பிரச்சனை ஆகியவற்றை தடுத்து, உடலில் கொழுப்புசத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பையும் தடுக்கிறது. அதனால் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது.

வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது சக்கரை வள்ளி. சிவப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் சக்கரை வள்ளி கிழங்கு காணப்படுகின்றன.

இந்த நிறத்திற்கு காரணம் அதில் உள்ள பீட்டா கரோடின்னே. பீட்டா கரோடின் அளவு அதிகமா இர்ருந்தால் அதன் நிறமும் அடர்த்தியாக இருக்கும் .

சக்கரைவள்ளி கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும். சக்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சத்து குறைந்த அளவில் இருக்கிறது.

மேலும், இதில் உள்ள பீட்டா கரோடின் என்ற இயற்கையான அமிலச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சர்க்கரை சத்து கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் ஏ சத்து அதிகளவில் இருப்பதால் தோல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#மருத்துவ குணங்கள்:

நீரிழிவுக்காரர்கள் கிழங்கு வகைகளே சாப்பிடக்கூடாது என்று ஆறிவுறாத படுவது உண்டு . ஆனால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டும் விதிவிலக்கு இதனை சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு சீராக சுரந்து செயல்படுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதான இருக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அனைத்து விட்டமின்களும், மினரல்களும் வயிற்ற்ல் உண்டாகும் #அல்சரை குணப்படுத்துகிறது.#நுரையீரல் மற்றும் வயிற்று புண்களுக்கும் நல்ல மருந்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்குஉள்ளது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள #ஃபோலேட் வயிற்றில் உள்ள கரு வளர்ச்சிக்கு உதவும் .#கர்ப்ப காலம் மற்றும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் போது சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அதிகம் சாப்பிடக் கூடாது.

#காய்ச்சல், #சளி மற்றும் இருமலை எதிர்த்து போராடுவதுடன், #எலும்பின் வலிமை மற்றும் ரத்த அணுக்களின் உற்பத்தி செய்ய உதவுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை #ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதில் உள்ள ஆன்தோசயானிடின்ஸ். ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் ஆன்டி #ஆக்ஸிடென்ட் மூன்றும் காயங்களை ஆற்றும் குணம் கொண்டவை.

இவற்றில் ஆந்தோசயானிடின்ஸுக்கு வயிறு,கழுத்து, நுரையீரல் மற்றும் புற்று நோய்களுக்கு காரணமான செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் குணமும் உண்டு.

#குறிப்பு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள ஆக்ஸாலிக் அமிலமானது ஆக்ஸலேட் கற்களாக உருமாறி கிட்னி ஸ்டோன் பிரச்சினைக்கு காரணமாகலாம்.

எனவே, இந்தக் கிழங்கை எடுத்துக்கொள்ளும்போது கூடவே வழக்கத்தைவிட அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.


No comments:

Post a Comment