நீங்கள்உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 M .L அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 M .L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 M .L - 30 M .L வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.
தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 M .L தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
சில ஆசனங்களால் நிவாரணம்:
***********************************
வஜ்ராசனம்
உஷட்டிராசனம்
சர்வாங்காசனம்
ஹலாசனம் மற்றும்
சிரசாசனமும் வலி குறைக்கும்.
கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக 'ஏலாதி சூர்ணம்' கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது பழமொழி.
புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச் சிக்கல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment