வள்ளல் பெருமான் கரிசாலையை கரிசலாங்கண்ணியை பச்சையாகவாவது சமையல் முதலிய வகைகளிலாவது தினமும் உண்டு வந்தால் ( அசக்தம் ) சக்தி இன்மை நீங்கும் என்றும் உடம்பு நெடு நாள் இருந்து முக்தி அடைய வழிவகுக்கும் என்றும் நெடுங்காலம் மகான்களிடத்தில் காத்திருந்தாலும் கரிசாலையின் உண்மையையும், பயனையும் அனுபவத்தையும் வெளியிட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள்.
தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்
தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்
தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை
தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே
என்று திருமூலர் கூறுவதும் இங்கு நினைவுகூரத்தக்கது
இத்தகைய அரிய உயர்ந்த பொருளை வெளிப்படுத்தி இல்லறத்தார் உள்பட அனைவரும் பின்பற்றும் வகையில் அதனை லேகியமாக தயார் செய்யும் முறையையும் பயன்படுத்தும் முறையையும் ஒளிவுமறைவின்றி முகநூல் மற்றும் வாட்ஸ்அப் கட்செவி நண்பர்களுக்கு வெளிப்படையாக பயன்படும் வகையில் பதிவிடுகிறேன்.
#கரிசாலை_லேகியம்
பொற்றலைக்கையான் சாறு
நெருஞ்சி சாறு
சிறு கீரை சாறு
பொடுதலைச் சாறு
கீழ்க்காய் நெல்லி சாறு
செருப்படை சாறு
நாவல் பட்டை
அத்திப்பட்டை
கருங்காலிப்பட்டை
தென்னம்பூ
மிளகு
மிளகரணைவேர்
அவுரி வேர்
சீரகம்
ஏலம்
கிராம்பு
ஜாதிக்காய்
ஜாதிபத்ரி
குரோசாணி ஓமம்
சிறுநாகப்பூ
கற்கடக சிங்கி
கோஷ்டம் அக்கிரகாரம் அதிமதுரம்
தாளிசப்பத்திரி
திரிகடுகு
திரிபலை
தேவையான அளவு- நெய், தேன், பசுவின் பால், பனை வெல்லம்.
இவைகளை முறைப்படி தயார் செய்யும் உண்மைபாரம்பரிய வைத்தியரிடமோ அல்லது பட்டதாரி மருத்துவரிடமோ தயார் செய்து ஒரு மண்டலம் சாப்பிட கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களும் நீங்கி ,கை கால் எரிச்சல் பெண்களுக்கு நீர் சுரப்புடன் காணும் கால் வீக்கம் ,மயக்கம் வாந்தி ,உடல் காந்தல் ,மூலக் கிராணி ,பாண்டு ,இதில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்தக் குறைவு தீரும். காமாலை வெள்ளை ,வெட்டை நோய், நரைத்த முடி ,தோல் நோய், நீங்கி உடல் பொன்னிறமாக மாறும் என்பது திண்ணம்.
No comments:
Post a Comment