உடல் நலம் : கண்ணனின் பசியை போக்கிய அகத்தி கீரையும் அதன் வரலாறும் !

Monday, October 14, 2019

கண்ணனின் பசியை போக்கிய அகத்தி கீரையும் அதன் வரலாறும் !



பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது குடலுக்கு சென்று விருந்து அருந்த சொல்லி, துர்வாச முனிவரை அனுப்பி வைத்தான் #துரியோதனன். அவரும் தமது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் ஒரு மாலைப்பொழுதில் பாண்டவர்களின் குடிலுக்கு வந்தார்.

அவர்களை வரவேற்ற தர்ம புத்திரர், திரெளபதி யிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். ஆனால் வீட்டில் எந்த உணவுகளும் இல்லை என்பது தர்ம புத்திரருக்கு தெரியாது. நீராடி விட்டு விருந்துக்கு வருகிறோம்! விருந்தை தயார் செய்யுங்கள் என்று கூறி விட்டு துர்வாசர் அவரது சீடர்களும் அருகிலுள்ள குளத்துக்கு சென்றார்கள்.

#திரெளபதிக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. கோபக்காரரான துர்வாச முனிவர் நம்மை சபித்து விடுவார் என்று அஞ்சிய அவள், கண்ணனை மனதார நினைத்தால் அடுத்த நொடியே கண்ணன் கண்ணெதிரே தோன்றினான்.

கண்ணனும் திரெளபதியிடம் பசிக்கிறது,உணவு இருக்கிறதா என்று கேட்டான். வந்தவர்களுக்கு விருந்தளிக்கவே ஒன்றும் இல்லை, நீயும் பசி என்றால் நான் எங்கே செல்வேன் என்றாள் திரெளபதி.

நீ தான் அட்சய பாத்திரம் வைத்து இருக்கிறாயே அதில் தான் உணவு வற்றாமல் இருக்குமே என்றான் கண்ணன். அதில் நான் சாப்பிடும் வரை உணவு வற்றாமல் இருக்கும் ஆனால் இன்று மதியம் நான் சாப்பிட்டு கழுவி வைத்து விட்டேன் என்றால்.

அதை இனி மறுபடியும் நாளை தான் பயன்படுத்த முடியும் என்றாள். அட்சய பாத்திரத்தை காட்டு என்றான் கண்ணன் அதில் ஒரு #அகத்தி கீரை மட்டும் ஒட்டி கொண்டு ஆஹா இது போதுமே என்றான் கண்ணன். அவரின் பசியும் தீர்ந்தது. அவரின் பசி தீர்ந்ததால் உலகில் உள்ள அனைத்து உயிர்களின் பசியும் தீர்ந்தது.

#துர்வாச முனிவரும் அவருடைய சீடர்களும் விருந்திற்கு வராமல் குளத்தில் குளித்து விட்டு அங்கு இருந்து சென்றுவிட்டனர். பேராபத்தாகிய துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காப்பற்றினான்.

#அகத்தியர் கீரைக்கும் முக்தி கிடைத்தது.  நாமும் கிருஷ்ணரை மனதார நினைத்து வேண்டிய வரங்களை பெறுவோம்.




No comments:

Post a Comment