நடை பயிற்சி என்பது இன்றைய சூழ்நிலையில் மனத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்வதால் எண்ணில்லாத பயன்கள் ஏற்படுகின்றன.
ஒருநாளைக்கு 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்களுள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
- இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
- இரத்த ஓட்டத்தின் அளவினை சீராக்குகிறது.
- 💃💃உடலின் நோய் எதிர்ப்பாற்றலின் அளவினை அதிகரிக்கிறது.
- எலும்புகள் மற்றும் தசைகளை வலுபடுத்த உதவுகிறது.
- நுரையீரல் நன்கு செயல்பட உதவுகிறது.
- உடல் அதிகளவு விட்டமின் டி தயாரிக்க உதவுகிறது.
- உடல் எடையினை பராமரிக்க உதவுகிறது.
- ஒபிசிடி என்னும் உடல்பருமனை தடுக்க உதவுகிறது.
- உடல் ஆற்றலின் அளவினை அதிகரிக்க உதவுகிறது.
- உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது.
- நீரழிவு நோய் வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.
- புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது.
- மனப் பதட்டத்தைக் குறைக்கிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
- மன உற்சாகத்தின் அளவினை அதிகரிக்க உதவுகிறது.
- ஆழ்ந்த உறக்கம் ஏற்பட உதவுகிறது.
- வாழ்க்கை முறையை மேம்படுத்துகிறது.
- சுய பாதுகாப்பினை வளர்த்து கொள்வதற்கு உதவுகிறது.
- படைப்பாற்றல் திறமையை உண்டாக்குகிறது.
நாமும் நடப்போம்; நலம் பெறுவோம்.
No comments:
Post a Comment