உடல் நலம் : 2020

Monday, December 21, 2020

உங்கள் சருமம் கருமையாகவுள்ளதா ?. பனிக்காலத்தில் சருமம் அதிக கருமையாக தெரிகிறதா?

 ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.


இரவில் படுக்கும்போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலரவைத்து கழுவவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமம் வெள்ளையாக மாறும்.

எலுமிச்சை சாற்றுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 4 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

எலுமிச்சையை பாதியாக வெட்டி அதனை சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவவேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

Friday, March 6, 2020

முட்டைகோஸின் மருத்துவ பயன்கள்....

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி.....


சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேத்துறது தான். ஆனா வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது. இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.

நமது இரத்ததில் உள்ள உப்பு சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும். இங்கே மிகவும் எளிமையான கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்.


கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை.:
ஒரு கப் அளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.

இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.

 அனைவரும் அறிந்த கொத்தமல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவதில் இதன் பங்கு அற்புதமானது. மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

Wednesday, January 22, 2020

நோயின்றி வாழ அற்புத வழிகள்:


இறைவன் படைத்த நம் உடல் உறுப்புகளின் அதிசயங்கள்!!

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன், கால்சியம் போன்ற 58 மூலப் பொருள்கள் (தனிமங்கள்) உள்ளன.

மனித உடலின் #மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது. கடைசிவரை வளர்வது #காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் #ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் #உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.

பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை #கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், #பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 #தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது #பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.

#இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

#உடலின்மொழி.

1.   உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.   உடல் - தண்ணீரை கேட்கும் மொழி   - தாகம்

3.   உடல்   - ஓய்வை கேட்கும் மொழி   - சோர்வு, தலைவலி

4.   உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.   உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.   உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -   வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.   உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.   உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.   உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை  நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை #நேசிப்போம், நாம் நம்மை  நேசிப்போம்.

நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், #மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.


தொண்டைக்கு இதம் அளிக்கும் தூதுவளை

தூதுவளை

Saturday, January 18, 2020

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்…❗

மனதின் வலிமை!!- ஒரு கதை ..



ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவள். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும்.

ரொம்பவும் கஷ்டப்படுவாள். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வாள்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவளுடைய ஆபீசில் ஒரு மீட்டிங்,அதில் கலந்து கொள்ளப் போனாள்.

அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நான் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறேன்' என்று பயந்தாள்.

ஆனால் வேறு வழியில்லாமல், அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தாள். பூக்களைப் பார்த்ததுமே அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்தும் விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுது தான் இவளுக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"

இப்படி நினைத்த மறுவினாடியே அவளுடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

#இதுதான்_நமது_மனம்..

#இந்த_மனதால்_நோய்களை_உருவாக்கவும் முடியும்.. #குணப்படுத்தவும் முடியும்..

இந்த மனதால்

பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும்.

எனவே,

நேர்மையான எண்ணங்களை மட்டும் எண்ணி, நாம் மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் இருந்தாலும். இருளை வெளிச்சமாக்கும் கதிரவன் போல அவற்றை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.

விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள்.

இந்த விடியல் உங்கள் வாழ்விலும் இன்பமாக  விடியட்டும்…!


நெட்டி முறிப்பது சரியா?