உடல் நலம் : தோல் நோய்களை குணப்படுத்தும் சீமையகத்தி

Tuesday, March 10, 2020

தோல் நோய்களை குணப்படுத்தும் சீமையகத்தி



சீமையகத்தி முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தோல் நோய்கள், கழிச்சலைக் கட்டுப்படுத்தும்; படர் தாமரையையும் குணமாக்கும்.
சீமையகத்தி 2 மீ. வரை உயரமான பெருஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள், கூட்டியலையானவை, நீள்வட்டமான அல்லது முட்டை வடிவானவை.
பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, பெரியவை, பொன்மஞ்சள், செம்மஞ்சள் நிறமானவை.
காய்கள், பச்சையானவை, முதிர்ந்த கனிகள், கருப்பானவை. நீளவாக்கில் வெடிப்பவை. விதைகள், எண்ணற்றவை.
இந்தியா முழுவதும், சமவெளிப் பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. தமிழகத்தில், சமவெளிகள், கடற்கரையோரங்கள், பயிராகும் நிலங்களுக்கு அருகில் வளர்கின்றன.
மேலும் இதன் மருத்துவ உபயோகங்களுக்காக, தோட்டங்களில் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. வண்டுக்கொல்லி, மலைத்தகரை, பேயகத்தி, வண்டுக்கடியிலை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
படர் தாமரை குணமாக சீமையகத்தி வேரை, எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

சீமை அகத்திக் கீரை, பூஞ்சைத் தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது. உடலில் வியர்வை தோன்றும் இடங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் சருமத்தில் உண்டாகும் இந்த அடர்ந்த சிவப்பு வண்ண தேமல் போன்ற வடிவம், அரிப்பையும் சொரிந்தால், உடலில் பரவக்கூடிய  தன்மையும் கொண்டது.

முகம் கறுத்து, சருமம் வறண்டு போகும். இதனால், முகம் பொலிவிழந்து சோகமாகக் காணப்படுவார்கள். இந்த பாதிப்பை சரி செய்ய, அவர்கள் இரவு  உறங்குமுன், சீமை அகத்தி இலைகளை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் இதமாக பூசிவிட்டு, காலையில் எழுந்தவுடன் மிருதுவாக  முகத்தை நீரில் அலசி வர, வறண்ட சருமம் கொண்ட முகம், மிருதுவாகி, மீண்டும் பொலிவாகும். முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள், சிறிய பூனை முடிகள்  நீங்கி, முகம் வனப்புடன் விளங்கும்.

No comments:

Post a Comment