உடல் நலம் : மாசி பௌர்ணமியின் மகத்துவம்.......

Monday, March 9, 2020

மாசி பௌர்ணமியின் மகத்துவம்.......




மகம் நட்சத்திரம் எல்லா மாதத்திலும் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் மிகவும்  புண்ணியம் வாய்ந்தது.மக நட்சத்திரத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும்  அதிகம் அருள்பவர். கேது பகவான் , ஞானத்தை அளிப்பதுடன் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். இப்படி பல புண்ணிய அம்சங்களை  கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. இப்படி பூரண சந்திரன் அமையும் நாளே மாசி மாத பவுர்ணமி.

💐மாசி மக பவுர்ணமி அன்று கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.

பிறவிப் பெருங்கடலை கடந்து, பிறவா வரம் வேண்டி இறைவனை வழிபட உகந்த நாளே  மாசி மாத பவுர்ணமி.

 ‘ஓம் ஷிர்புத்ராய வித்மஹே

அம்ரித் தத்வாய தீமஹி

தந்நோ சந்த்ர பிரசோதயாத்‘

- சந்திர காயத்ரி மந்திரம்

 அமாவாசை  ஒரு நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர் சந்திரன். இதனால் தான் சந்திரனை  ‘சர்வம் சந்திர கலாபிதம்‘ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது வருவது தான் பவுர்ணமி.

அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். மனதை ஆளும் ஆற்றல் படைத்தவன் சந்திரன். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் என ஒரு மனிதனின் பல குணங்களை நிர்ணயிப்பது சந்திரனே.

மாசி மாத பவுர்ணமியில் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாகவே பவுர்ணமி  அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும்.  மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும்.

பவுர்ணமி வழிப்பாட்டுக்கான சிறப்பு திருத்தலங்கள்

பவுர்ணமி அன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வழிபாடுகள் செய்து சந்திர தரிசனம் செய்யலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகில் உள்ள வரகுண மங்கை, கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஆகியவை சந்திர பரிகார ஸ்தலங்கள், சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிப்பது பெரும் சிறப்பு.

மாசிமாத  பவுர்ணமி தரும் மகத்தான பலன்கள்

மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால்  உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.பிறவா பேரருள் உங்களுக்கு வாய்க்கும்.

மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை திருத்தலத்தில்  கிரிவலம் செல்லுவது அற்புத பலன்களை அள்ளித்தரும். கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோர்கள்,வழக்கறிஞர் ஆகியோர் அதிகப் பலன்களை அடைய முடியும். கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால், அதிலிருந்து மீளமுடியும்.

மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

No comments:

Post a Comment