உடல் நலம் : பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ....

Wednesday, March 11, 2020

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ....




நம்மில் பலருக்கு பழங்கள் சாப்பிடுவதென்பது மிகவும் அதிகமாக பிடிக்கும். அதில் ஒரு சிலர் பழத்தில் தேன்,உப்பு போன்றவை சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு.

அதில்  நாவல் பழம்,  நெல்லி, மாங்காய் போன்றவற்றினில் உப்பை தூவி சாப்பிடும்போது அதன் சுவையானது இன்னும் அதிகம்.

நாம் உப்பை தூவி சாப்பிட்டால் பழங்கள் பிரஷ்ஷாக, அதில் உள்ள #பாக்டீரியா மேலும் வளராமல் தடுக்கிறது.அதுமட்டுமல்லாமல் உப்பு கலந்த தண்ணீரில் பழத்தைக் கழுவினால், பழங்களில் இருக்கும் பூச்சிகொல்லி மருந்துகள் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் உடனடியாக அகலும்.

திராட்சை பழம், ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சை பழம் போன்ற பழத்தில் அசிட்டிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. அதனால் உப்பை தடவி சாப்பிட்டால் மிகவும் நல்லது. இவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

அதனால் இதனுடனே உப்பு கலந்து கொண்டால் வயிற்றினில் சுரக்கும் அமிலத்தினை சமநிலையாக்கிறது. அதேபோல் செரிமாண சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தீர்க்கும் என்றும் கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment