கற்பூரம் என்பது மெழுகு போன்று, வெள்ளை நிறத்தில் இருக்கும் திடப்பொருளாகும். எளிதில் எரியக்கூடிய தன்மை கொண்டது. இந்துக்களின் வீடுகளில் கட்டாயம் பூஜை அறையில் இருக்கும் ஓர் பொருள் கற்பூரம் ஆகும். இந்த கற்பூரம் இயற்கையாகவே இனிய நறுமணம் கொண்டது. இதன் நறுமணத்திற்கு அடிமையாகதவர்களே இல்லை.
இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக இந்த கற்பூரம் தான் சேர்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், அதன் நறுமணம் மற்றும் அதன் மருத்துவ பண்புகளும் தான். பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில் கற்பூரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கற்பூரம் சிறிய கட்டிகளாகவும், எண்ணெய் வடிவிலும் கடைகளில் கிடைக்கும். மேலும் கற்பூரம் மருத்துவத் துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நன்மைகளும் பயன்களும் :
கற்பூரம் சளியைப் போக்கும் அற்புத குணம் படைத்தது. சளித் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். இது நெஞ்சு சளியை இளகச் செய்து, சளியை வெளியேற்ற உதவியாக இருக்கிறது.
உதடுகளில் புண் வந்தால், அது நாம் உணவு உட்கொள்ளும் போது, கடுமையான வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இவற்றை விரைவாக சரி செய்ய கற்பூரம் உதவுகிறது.
கற்பூர எண்ணெய் முகத்தில் உள்ள பருக்களைப் போக்க உதவுகிறது. குறிப்பாக, சருமத்தில் உள்ள தழும்புகளை மறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
மூக்கு அடைப்பில் இருந்து உடனடி நிவாரணத்தை கற்பூரம் அளிக்கிறது.
பேன் தொல்லை நீங்க கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி வந்தால், நல்ல பயன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் பேன்களை நகர விடாமல் தடுக்கும். கற்பூரமோ பேன்களை அழித்துவிடும்.
தசை வலிகளுக்கும் கற்பூரம் நல்ல சிகிச்சை அளிக்கிறது. இதற்கு கற்பூரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். அதற்கு கற்பூரத்தை அத்தியாவசிய எண்ணெய்களுடன் சேர்த்து கலந்து வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் சீராகி, தசைகளில் ஏற்பட்ட பிடிப்புகள் நீங்கி, விரைவில் குணமாகும்.
குதிகாலில் வெடிப்பு இருந்தால், அதனை நீக்கும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. மேலும் வெடிப்புக்களால் ஏற்படும் வலியைக் குறைத்து, வெடிப்புக்களை விரைவில் சரிசெய்தும் விடும்.
கால்களில் ஆணி இருந்தால், சாதாரணமாக நடப்பது சற்று கடினம். இதனால், மிகுந்த கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இதனை சரி செய்ய கற்பூர எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.
கற்பூர எண்ணெய் ஒரு இயற்கைப் பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. இதனை வீடுகளில் பயன்படுத்தும் போது, பூச்சிகள் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்கிறது.
No comments:
Post a Comment