பிரவுன் ரைஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிவப்பு அரிசியை, தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும், சரக்கு அரிசி என்றும் பல இடங்களில், பல விதமாக சொல்கிறார்கள்.
இதன் கெட்டியான வெளித் தோலுக்கு (உமி) அடுத்ததாக, மெல்லியதாக சிவப்பு நிறத்தில் மேல் தோல் (தவிடு) இருக்கும்.
இதை நீக்கி, பலமுறை தீட்டப்பட்டு, அனைத்துச் சத்துக்களும் இழந்த பின் கிடைப்பதுதான், நாம் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும், வெள்ளை அரிசி.
சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள், அதிக அளவில் உள்ளன. இந்த அரிசியில் உள்ள “காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்” இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
தானிய வகைகளில் “வைட்டமின் ஈ” இந்த சிவப்பு அரிசியில் மட்டும்தான் உள்ளது.
இதில் நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்க உதவுகிறது.
தன்னிடம் இருக்கும் “ஆன்டி ஆக்ஸிடென்ட்” குணங்களால், இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். “ஆன்த்தோசயனின்”, “பாலிபீனால்” போன்ற வேதிப்பொருட்களும், இந்த அரிசியில் சங்கமித்திருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு, வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி பல மடங்கு நல்லது. அரிசி உணவு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.
சிவப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்தானது, புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக்கொள்ளும்.
சிவப்பு அரிசியில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் குணமாகும்…!!!.
No comments:
Post a Comment