உடல் நலம் : யோகா செய்வதற்கு சிறந்த நேரம் எது? HEALER BASKAR

Sunday, February 2, 2020

யோகா செய்வதற்கு சிறந்த நேரம் எது? HEALER BASKAR




பதில் : யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் எந்த நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் யோகா செய்யும் நேரமே சிறந்த நேரம்.

இதுவரை யாருமே சாராயம் குடிப்பதற்கு, பீடி, சிகரெட் குடிப்பதற்கு, கஞ்சா அடிப்பதற்கு, மூக்குப்பொடி போடுவதற்கு, பான்பராக் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது என்று கேட்டதே கிடையாது.!!!!! இதுபோன்ற விஷயங்கள் எல்லா நேரங்களிலும் நடக்கிறது. ஆனால் நல்ல காரியம் செய்வதற்கும் மட்டும் நாம் ஏன் நேரம், காலம் பார்க்க வேண்டும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தான் யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது சிறப்பு என்று கூறுவார்கள். ஆம் உண்மைதான், அதற்காக அந்த நேரம் மட்டுமே சிறந்தது என்று அர்த்தமில்லை. பிரம்ம முகூர்த்தத்தில் யோகா செய்தால் நூறு கிலோ சக்தி கிடைக்கிறது என்றால் மற்ற நேரத்தில் பயிற்சி செய்தால் 90 அல்லது 80 அல்லது 70 கிலோ கிடைக்கும். எனவே கிடைத்தவரை லாபம்.

உதாரணமாக ஒருவர் தனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவதற்கு இரவு 11 மணி ஆகிறது, அந்த நேரத்தில் யோகா செய்து விட்டு, பிறகு சாப்பிட்டுவிட்டு, பிறகு தூங்கலாம்.

உதாரணமாக இல்லத்தரசிகள் பகல் நேரத்தில் ஓய்வாக இருப்பார்கள் எனவே அவர்கள் பகல் நேரத்தில் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். மதியம் 12 மணிக்கு கூட யோகா செய்யலாம்.

யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம், உடற்பயிற்சி செய்யாமலேயே இருப்பதைவிட ஏதோ ஒரு நேரத்தில் செய்வது சிறப்பு.

பொதுவாக சாப்பிட்ட உடனே செய்யக்கூடாது. சாப்பிட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யோகா செய்யலாம்.

மீண்டும் சொல்கிறேன், கெட்ட காரியம் செய்வதற்கு நேரம் காலம் பார்க்காத போது, நல்ல காரியத்திற்கு மட்டும் ஏன் நாம் நேரம், காலம் பார்க்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் நேரம் அனைத்துமே நல்ல நேரமே.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
9944221007.

No comments:

Post a Comment