உடல் நலம் : துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும் ?

Thursday, February 13, 2020

துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும் ?




துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும்  என்ற கருத்தை படித்த தகவலை பதிவு செய்துள்ளோம். ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே சரணம் !

ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.



ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.



பொதுவாக பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற விளக்கேற்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழிபடுகிறார்கள்.

செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.



பூஜிக்க உகந்த காலம்



துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும். துர்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவையே.



மேலும் அவளுக்கே உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.





காயத்திரி (சகல காரியங்கள் வெற்றி அடைய)



ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்

வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோனஹ் ப்ரசோதயாத்



துர்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக)



ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யகுமரி தீமஹி

தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்



ஓம் சிம்மத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ மாரி ப்ரசோதயாத்



ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.



ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.



நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.



இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிச்சையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.



வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும்.

வாழ்வும்  ஆனவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்

 தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே என்று இன்று  பாடி தொழ வெற்றிகள் நிச்சயம் .நல்வாழ்வும்  நிச்சயம் !

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

வாழ்வும்  ஆனவள் துர்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்

தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்கா செபமுமானவள்

அம்மையானவள் அன்புத் தந்தையானவள்

இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்

மும்மையானவள் என்றும் முழுமையானவள்

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிருமானவள் துர்கா உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமையானவள்

பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையுமானவள் இன்பத் தோணி யானவள்

அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்

குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்

திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்

ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே

கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே

அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே

அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

("தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே" என்று வரும்பொழுது விரதம் இருப்பவர்கள் நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.)

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

 ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே சரணம் !

No comments:

Post a Comment