#வஞ்சி மரம் என்பது புராணங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த மரம் ஆகும். இதற்கு சீந்தில்கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, , சாகா மூலி என பல பெயர்கள் உண்டு.
மரணத்தையும் வெல்லும் சக்தி வஞ்சி மரத்திற்கு உள்ளதாக கூறப்படுகிறது. கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. இதன் இலை, கொடி, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டது.
மருத்துவ குணங்கள்:
சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதி, சர்க்கரை நோய், காசநோய், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களில் இருந்து பாதுகாக்க கூடிய அருமருந்து வஞ்சியிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
#வளத்திற்கு வஞ்சி மரம் : அக்கால இலக்கியங்கள் ஒரு வளமான நாட்டிற்கு அடையாளம் சொல்லுகையில் வஞ்சி மரமும் நிறைந்த நாடு என்று குறிப்பிடுவது உண்டு.
சிவ தொண்டர்கள் வரலாற்றைக் கூறும் பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் திருமலை சருக்கம் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். மரணத்தின் பிடியில் உள்ள நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது என்பதில் மாற்றமில்லை.
No comments:
Post a Comment