உடல் நலம் : சண்டை போடும் போது பெண்கள் இந்த தவறை மட்டும் செய்தீராதீங்க..!

Saturday, January 18, 2020

சண்டை போடும் போது பெண்கள் இந்த தவறை மட்டும் செய்தீராதீங்க..!




தம்பதியர் சண்டையிடும் போது சில விஷயங்களை எக்காரணத்தை கொண்டும் செய்யக்கூடாது. இவை, கணவன் மனைவி உறவையே சிதைக்கக்கூடியது.

எல்லா தம்பதிகளுக்குள்ளும் சில சண்டைகள் சச்சரவுகள் நடக்கும். சில நேரங்களில் விவாதங்களில் ஈடுபடுவீர். சண்டையிடுவது மனித இயல்பு. ஆனால், சண்டையிடும் போது சில விஷயங்களை எக்காரணத்தை கொண்டும் செய்யக்கூடாது.

இவை, கணவன் மனைவி உறவையே சிதைக்கக்கூடியது. அவற்றை இப்போது பார்க்கலாம்.

1 கணவன், மனைவிக்குள் விவாதங்கள் தீவிரமாக தீவிரமாக எல்லோரும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவமதிக்க நினைப்போம். இது முற்றிலும் தவறானது.
அதுவும் நம் வாழ்க்கைத்துணையிடம் அவ்வாறு நடந்துகொள்ள கூடாது. அது அவர்கள் மனதை புண்படுத்துவதோடு, அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

2 உங்கள் சண்டை மற்றும் விவாதம் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும், கடந்த காலத்தை இழுக்காதீர்கள். உங்கள் துணை, அவருடைய கடந்த காலத்தை எண்ணி வருந்திக்கொண்டிருந்தால்,
இது மேலும் அவருக்கு மனஉளைச்சலை தரும். கணவன் மனைவி உறவு என்று வந்துவிட்டால் கடந்த காலத்தை தோண்டாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது.

3 உங்கள் மௌனம் உங்கள் துணையின் மனதை மிகவும் காயப்படுத்தும். இது எந்த விதத்திலும் பிரச்சனையை தீர்க்காது. உங்கள் உணர்ச்சிகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்தவில்லை என்றால் எவ்வாறு அவர்கள் அதை கண்டுபிடிப்பார்கள்;
எவ்வாறு ஒரு தீர்வை தருவார்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் துணையால் உங்கள் மனதில் இருப்பதை படிக்க முடியாது. நீங்கள் தான் உங்கள் மனதில் உள்ளதை கூறி,
பிரச்சனையை தீர்க்க உங்கள் துணையுடன் சேர்த்து செயல்பட வேண்டும்.

4 விவாதத்தின் போது, எளிதாக, வேறு ஒரு பிரச்சனை குறித்து சண்டை திசைமாற வாய்ப்புகள் உண்டு.
எக்காரணத்தை கொண்டும் அதை செய்யாதீர்கள். எதை குறித்து விவாதம் செய்கிறீர்களோ அந்த விஷயத்தில் இருந்து திசை மாறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
இதனால் சண்டை பெரிதாகாமல் சீக்கிரமாக முடியும்.

5 நம் எல்லாருக்கும் நம் வாழ்க்கைத்துணையை காயப்படுத்தும் விஷயங்கள் என்னவென்று தெரியும்.
அவற்றை செய்யக்கூடாது என்று தெரிந்தாலும், அந்த தருணத்தில் நாம் அதை செய்துவிடுவோம்.
இதை நீங்கள் செய்வீர்கள் என்றால் அதை கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் விவாதத்தின் போது இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபடாதீர்கள்.


6 சண்டையிடும் போது உங்கள் துணையின் தோற்றதே கொண்டு அவர்களை அவமதிக்க வேண்டாம்.
இத்தருணத்தில் இது தேவை இல்லாத விஷயம். விவாதத்தின் போது உங்கள் துணைக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது தலை வழுக்கையாக இருந்தாலோ அதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இது மற்றவர் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை அறியாமல் தம்பதிகள் செய்யும் தவறான விஷயமாகும்.

7 உங்கள் உறவு தனித்துவமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
மற்ற தம்பதிகளோடு எக்காரணத்தை கொண்டும் உங்களை ஒப்பிட்டு கொள்ளாதீர்கள்.
அவர்கள் வேறு, நீங்கள் வேறு என்பதை மறக்காதீர்கள்.
தேவை இல்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டால் உங்களுக்கு தாழ்வுமனப்பான்மை தான் ஏற்படும்.

8 சண்டை உங்கள் குடும்பத்தை பற்றி இருந்தாலொழிய, உங்கள் துணையின் குடும்பத்தை பற்றி சண்டையின் நடுவில் பேசாதீர்கள்.
உங்கள் துணைக்கு, அவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் மிக முக்கியமாக இருக்கலாம். அதனால், அதை சண்டையின் நடுவில் கொண்டு வருவது அவ்வளவு நல்லதல்ல.
உங்கள் குடும்பத்தை பற்றி உங்கள் வாழ்க்கை துணை தப்பாக பேசினால் எப்படி உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாதோ, அதே போல தான் அவர்களுக்கும்.

10 சண்டை பெரிதாகி, நிலைமை கைமீறி போகலாம்.
அதனால் உங்கள் துணையை மரியாதை குறைவாக பேசவோ நடத்தவோ வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவர் உங்கள் வாழ்க்கைத்துணை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அவர்களை தரக்குறைவாக பேசவோ நடத்தவோ வேண்டாம்

வாழ்கை என்பது ஒரு முறை தான் வாழ்ந்து பாருங்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்
நிம்மதி ஆரோக்கியம் சந்தோசம் உங்களை விட்டு போகவே போகாது

No comments:

Post a Comment