பொதுவாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது நோய் தொற்று அதிகம் ஏற்படும். குறிப்பாக எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தை களையும், வயதானவர்களையும் வைரஸ் தொற்று எளிதாக தாக்கும். ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு நோய் தொற்று தாக்குவது குறைவு. அன்றாட பழக்க வழக்கங்களிலும் உணவு முறை மூலம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகாரிக்கலாம்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.
வைட்டமின் சி உள்ள நெல்லிக்காய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. தினமும் காலை நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
தினமும் ஒரு வேளை எலு மிச்சை சாறு, சமபாதி அளவு நெல்லிச்சாறு கலந்து பழச்சாறாக குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்த்துகொள்ளலாம்.
பழங்கள் அனைத்துமே சத்துமிக்கவை என்பதால் பழங்கள் இல்லாமல் உணவை எடுக்க வேண்டாம். குறிப்பாக கொய்யா பழம் தினமும் சாப்பிடுவது எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். இவை தவிர கீரைகள் காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.உணவில் காரத்துக்கு மிளகாயை சேர்க்காமல் மிளகை சேருங்கள்.
கிருமி நாசினியான மஞ்சளை அன்றாடம் சமையலில் சேர்ப்பதுண்டு என்றாலும் கூட சற்று அதிகப்படியாக சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தினமும் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுபொடியை சேர்த்து கொடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இப்படி உணவில் தினமும் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு, நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றை தவறாமல் எடுத்துக்கொண்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்று ஏற்படாமல் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment