உடல் நலம் : தோல் மண்டலம் (skin) பணிகள்........

Tuesday, September 24, 2019

தோல் மண்டலம் (skin) பணிகள்........

தோல் மண்டலம் என்றால் என்ன?



உடலின் மிகப் பெரிய மண்டலம் தோல் மண்டலம். தோல் மண்டலம் மிகவும் முக்கியமானது. தோல் நமக்கு அழகை கொடுத்தாலும் கூட அது ஒரு பாதுகாப்பு கவசம் என்பது தான் உண்மை.

தோல் மண்டலத்தின் பணிகள்

ஒவ்வொரு உறுப்பிற்கும் உட்புறமும், வெளிப்புறமும் தோல் அமைந்துள்ளது. இப்படியாக உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றது. தோல் மண்டலத்தின் முக்கிய பணியானது ஒரு பொருளை உள்வாங்கும், மற்றும் ஒரு பொருளை வெளியே தள்ளும். தோல் வழியாகத் தான் உடலின் அனைத்து பரிமாற்றமும் நடைபெறுகின்றன.

சுவாச குழாய், உணவு குழாய், மூச்சு குழாய் இவைகளின் உட்புறமும், வெளிப்புறமும் தோல் அமைந்துள்ளது. இந்த தோல் வழியாகத்தான் நாம் சுவாசிக்கும் காற்று இரத்தத்துடன் கலக்கின்றது. நாம் உண்ணும் உணவுக் கூழ் தோல் வழியாகத் தான் இரத்தத்துடன் கலக்கின்றது. நம் சிறுநீரக மண்டலம் இரத்தத்தில் உள்ள உப்பு நீர் கழிவை தோல் வழியாகத் தான் பிரிகின்றது. எனவே தோல் இருந்தால் தான் நம் உடலில் ஒரு பரிமாற்றம் நடைபெறும். எனவே தோலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சுவாசம்,ஜீரணம், சிறுநீரகம் இந்த மூன்று மண்டலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது ஒட்டுமொத்த உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தோலை எப்படி சுத்தமாக வைப்பது?

தோல் நமக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தோல் வழியாகத் தான் நோய் தொற்று ஏற்படும். நாம் எந்தளவிற்கு தோலை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அந்தளவிற்கு நமக்கு நோய் தொற்று ஏற்படாது. பெண்கள் முகம், கால்களில் மஞ்சள் பூசிக் கொள்வது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இவையணைத்தும் தோலின் தரத்தை உயர்த்துவதற்கான எளிய வழிமுறைகள். தோலை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

தோல் மண்டலத்திற்க்கு கொழுப்பு எப்படி பயன்படுகிறது?

தோலின் உற்பத்திற்கு ஆதாரப் பொருள் கொழுப்பு. ஓரிடத்தில் தோல் பாதிப்பாகி விட்டால், மீண்டும் அந்த இடத்தில் தோல் உருவாக வேண்டும் என்றால் கொழுப்பு தேவை. கொழுப்பு இல்லை என்றால் தோல் உற்பத்தி ஆகாது. புண்கள், காயங்கள் ஆறாது. கொழுப்பு இருந்தால் தான் தோல் அழகு, ஆரோக்கியம் மற்றும் வலிமையாக இருக்கும். ஆனால் நாம் கொழுப்பை சாப்பிட்டும் புண்கள் ஆறவில்லை என்றால் நாம் உண்ட கொழுப்பு பயன்பாட்டிற்கு வரவில்லை. நாம் உண்ணும் கொழுப்பை உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை சேமித்து வைக்க வேண்டும். தேவைப்படும் பொழுது அது பயன்பாட்டிற்கு வரவேண்டும். அப்படி இல்லாமல் நாம் சாப்பிடும் கொழுப்பு உணவு உடல் எடுத்துக் கொள்ள முடியாத கொழுப்பாக இருந்தால் அது பயன்பாட்டிற்கு வராது.

உடல் பயன்பாட்டிற்கு வராத கொழுப்பு உடலில் இருந்தால் அந்த தோல் வேலை செய்யாது. அந்த இடத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும். எனவே அந்த பகுதி வேலை செய்யாது. எனவே கெட்ட கொழுப்பினால் உள் வாங்குதல், வெளியேறுதல் தடைபடும். இதற்கு அடைப்பு என்று பொருள். தோல் சரியாக இருந்தால் தான் சத்துக்கள் உள்ளே செல்லும். கழிவுகள் வெளியேறும். எனவே தோல் பாதிப்பினால் ஜீரணம், சுவாசம், சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்

பெட்ரோலியம் மூலம் கிடைக்கும் எண்ணெய் பொருள் உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியம் கொடுக்காது. ஆனால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ இதுவரை இந்த எண்ணையினை பயன்படுத்தி வந்துள்ளோம். இது போன்ற தவறான கொழுப்பை சாப்பிட்டதன் விளைவாக மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது. எனவே பெட்ரோலிய எண்ணையினை தவிர்த்து நமது பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் இவைகளை பயன்படுத்த வேண்டும். தவறான எண்ணெய்யால் உடலின் பாதுகாப்பு சீர்கெடும்.

இந்த தவறான கொழுப்பை சாப்பிட்டதின் விளைவாக இந்த கொழுப்பு சேமிக்கவும் முடியாமல், பயன்பாட்டிற்கும் வரமுடியாமல் ஆங்காங்கே தங்கி விடுகின்றது. இந்த தேகத்தின் விளைவாக தான் நாம் பிரச்சினைகளை சந்திக்கின்றோம். உதாரணமாக இருதய அடைப்பு இதற்கு காரணம் தவறான கொழுப்பு.

கொழுப்பு உடலுக்கு மிகவும் அவசியமானது. கொழுப்பை உடல் சேமித்து வைத்துக் கொள்ளும். சேமித்த கொழுப்பை உடல் தேவைப்படும் பொழுது சக்தியாக மாற்றிக் கொள்ளும் தோலிற்கு மிகவும் முக்கியமானது கொழுப்பு. தோலில் உள்ள எண்ணெய் பசைக்கு கொழுப்பு தான் காரணம்.

No comments:

Post a Comment