உடல் நலம் : நமது காலை உணவு என்னவாக இருக்கவேண்டும்?

Saturday, September 21, 2019

நமது காலை உணவு என்னவாக இருக்கவேண்டும்?

நமது காலை உணவு என்னவாக இருக்கவேண்டும்?


உணவை பற்றி நினைப்பதற்கு முன்னால், நமது உடலின் இயக்கத்தை பற்றி புரிந்து கொள்ளுங்கள். இரவு பத்து மணிக்கு படுக்க செல்கிறீர்கள். காலை ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்கீறீர்கள்.எட்டு மணி நேரம் எந்தவிதமான திரவ  பொருட்களும் திட பொருட்களும் உடலுக்கு கொடுக்கப்படவில்லை.உடலானது அந்த எட்டு மணி நேர இடைவெளியில்  முக்கியமான பணிகளை செய்கிறது. அதை நாம் overhauling என்று சொல்லலாம். சின்ன சின்ன கோளாறுகள்  எல்லாம் சரி செய்யப்படுகின்றன. இரவு சாப்பாடுக்கு பின்னர், எந்தவிதமான உணவும் எடுக்கக்கூடாது என்பது  உடல் ஆரோக்கியத்தின் விதியாகும்.

காலை எழுந்தவுடன், பல் துலக்கியவுடன், முடிந்த அளவு தண்ணீர் குடியுங்கள். ஒரு டம்ளர் முதல் மூன்று டம்ளர் வரை குடிக்கலாம். அது உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மையை பொறுத்தது,வெது வெதுப்பான நீர் போதுமானது. குளிர்ந்த நீர் கூடவே கூடாது. குளிர்ந்த நீர் குடலின் உட்புறத்தை சுருங்க  செய்துவிடும். நாளடைவில் குடல் சுருங்கி விடும். ஒரு மனிதனின் சிறு குடலின் நீளமானது 20 அடியாகும். சுருங்கி சுருங்கி அது 15 அடிகளாகி குறைந்து  விடும். வெது வெதுப்பான நீர் உள்ளே சென்றவுடன், உள்ளே இயக்கத்தை நிறுத்திவைத்திருக்கும் இரப்பை, குடல் போன்றவை புதிய வேலை கொடுத்தவுடன், சுறு சுறுப்பாகி விடும்.

தண்ணீர் குடித்து பதினைந்து நிமிடங்கள் சென்ற பின், ஒரு திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். அது green tea யாக இருக்கலாம்; கேப்பைக்கூழ் ஆக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த திரவ உணவை எடுத்துக்கொள்ளலாம். திரவ உணவு உடனே செரிக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கும்போது உடலில் சக்தி உடனே சேர்ந்து விடுகிறது.  அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழிந்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம். காலை உணவு ஒன்பது மணிக்குள்ளாக முடித்துவிடவேண்டும்.காலை உணவு மிருதுவானதாக இருக்கவேண்டும். அதனால் தான் இட்லி, பொங்கல், தோசை போன்றவற்றை ஹோட்டலில் பரிமாறுகிறார்கள்.உங்களுக்கு பிடித்தமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை, கார உணவுகள் மற்றும் கடும் அசைவை உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கிய விதி - உடல் சாப்பிடவேண்டாம் என்று உணர்த்தும் பொது, சிறு துளி உணவும் உள்ளே செல்லக்கூடாது. இந்த விதியை பயன்படுத்தினால், எந்த விதமான வயிற்றுக்கோளாறுகளும் உங்களுக்கு வருவதில்லை.

No comments:

Post a Comment