புடலங்காய் நன்மைகள் :
புடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள். அதாவது சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், ஆகிய காய்கறிகள் அனைத்தும் இந்த குடும்பத்துக்குள் தான் வருகிறது. உலகம் முழுவதுமே பயன்படுத்தக் கூடிய காய்கறிக் குடும்பம் தான் இது.
புடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதனை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
250 கிராம் புடலங்காயில் சராசரியாக உள்ள சத்துகள் :
கலோரி – 86.2
மாவுச் சத்து - 12.5 கிராம்
கொழுப்பு – 3.9 கிராம்
சோடியம் – 33 மி.கி
பொட்டாசியம் – 359.1 மி.கி
நார்ச்சத்து – 0.6 கிராம்
புரதம் – 2 கிராம்
விட்டமின் ஏ 9.8 %
விட்டமின் பி6 – 11.3 %
விட்டமின் சி – 30.6%
கால்சியம் – 5.1 %
இரும்புச்சத்து – 5.7%
மருத்துவ பயன்கள்
தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். மேலும் கண் பார்வையைத் தூண்டும்.
டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது.
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நோயின் பாதிப்புகள் குறையும்.
காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.
இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.
ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும் புடலங்காய் விந்துவை கெட்டி படுத்தும். புடலங்காய் சாப்பிடுவதால் காம உணர்வு அதிகரிக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
மேலும் இதை அடிக்கடி உண்பது மலேரியாவை நீக்கும், மஞ்சள் காமாலைக்கு தீர்வு செய்யும், இதய ஆரோக்கியம் காக்கும், மலச்சிக்கல் தீர்க்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியாக வைத்திருக்கும்.

No comments:
Post a Comment