உடல் நலம் : பாத வலி, மூட்டு வலியை நீக்கும் வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க

Tuesday, September 17, 2019

பாத வலி, மூட்டு வலியை நீக்கும் வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க




நம்மில் பெரும்பாலானவர்கள் கணுக்கால் வலி, பாத வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுவதுண்டு.

இதனை ஒருசில பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

தற்போது அந்த பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

குதிகால் பயிற்சி

நாற்காலியின் பின்பகுதியில் கால்களை ஊன்றி நிற்க வேண்டும். கைகளை நாற்காலியின் மீது வைத்து ஒரு காலை மேலே தூக்கி கால்விரல்களின் துணையுடன் நிற்க வேண்டும்.

சில விநாடிகளில் காலின் பின்பகுதியை மீண்டும் தரையில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு காலையும் கொண்டு இந்த பயிற்சியை 10-15 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி

விரல்களால் நடப்பது

கால் விரல்களை மட்டும் தரையில் அழுத்தி மெதுவாக நடக்க வேண்டும்.

பின்னர் வேகத்தை சற்று அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்கள் இந்த நடை பயிற்சியை மேற்கொள்ளலாம்.

பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்தலாம். இது கணுக்கால்களுக்கு அழுத்தம் கொடுத்து அதனை வலுப்படுத்த உதவும்.

நடை பயிற்சி

கால் விரல்களை நன்றாக மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களுக்கு இடையில் ஏதாவது பொருளை செருகி வைத்து அது கீழே விழாத அளவுக்கு சிறிது நேரம் நடக்க வேண்டும்.

இந்த பயிற்சிக்கு கால்விரல்களையும், பாதங்களையும் பயன்படுத்த வேண்டும்.

பந்து மூலம் பயிற்சி

கால்களின் கீழ் டென்னிஸ் பந்தை வைத்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

பந்தின் மீது கால் பாதத்தை வைத்து முன்னும், பின்னுமாக மெதுவாக நகர்த்தி மசாஜ் செய்ய வேண்டும்.

பாத மசாஜ்

ஒரு கால் விரல்களுக்கு இடையே மறு காலின் கட்டை விரலை வைத்து மென்மையாக அழுத்தி மசாஜ் கொடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் இந்த மசாஜை மேற்கொள்ளலாம்.

கால் விரல் பயிற்சி

நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை வட்ட வடிவத்தில் மெதுவாக சுழற்ற வேண்டும்.

முன்னும் பின்னுமாக கால்விரல்களை 10 தடவை சுழற்றி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

கணுக்கால்கள் பலவீனமாக இருப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment